News

மக்களுக்கு சலுகை வழங்க பாராளுமன்ற அதிகாரம் தேவையில்லை..

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதாக சொன்னார்கள்,மக்களுக்கு சுமையாக உள்ள வரிகளை குறைப்பதாக சொன்னார்கள் ஆனால் ஒன்றும் செய்யவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

மக்களுக்கு சுமையாக உள்ள வரிகளை குறைக்க, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க பாராளுமன்ற பெரும்பான்மை தேவையில்லை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தினால் அதனை செய்ய முடியும்.

எதிர்க்கட்சியில் இருந்து எதையும் பேசமுடியும் ஆனால் ஆளும் கட்சிக்கு வந்து செய்வது கடினமாகும்.மஞ்சள் நிற “லாப் கேஸ்” தற்போது சந்தையில் இல்லை.

நாம் நியமனங்கள் வழங்கிய போது விமர்சித்தவர்கள் இன்று நண்பர்களுக்கு பதவி வழங்கிகொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி செயலாளர் ஜனாதிபதி அனுர குமாரவின் அறையில் தங்கிய அவரது கெம்பஸ் நண்பர்,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அமைச்சர் விஜேத ஹேரத்தின் அறையில் தங்கிய நண்பர்.

குடும்ப அரசியலை விமர்சித்தார்கள் தந்தை களுத்துறையில் போட்டியிடுகிறார்.மகன் கொழும்பில் போட்டியிடுகிறார். கணவன் தேசிய பட்டியலில் உள்ளட்டக்கப்பட்டுள்ள போது மனைவி கொழும்பில் தேர்தல் கேக்கிறார்.

சிஸ்டம் சேன்ஞ் செய்ய வந்தவர்களின் நிலமை இதுதான் என அவர் கூறினார்.

Recent Articles

Back to top button