பேஸ் இமாம்களின் ஊதியம் பத்தாயிரம் ரூபாவாகவும் – குளிரூட்டப்பட்ட பள்ளிவாசலின் மின் கட்டணம் இரண்டு இலட்சமாகவும் இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது
மாளிகைக்காடு செய்தியாளர்
கிழக்கு மாகாணத்தில் உள்ள சுமார் 200 உலமாக்கள் கலந்துகொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று (26) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்றின் பெரிய பள்ளிவாசல் மற்றும் அனைத்து பள்ளிவாசல் முன்னாள் தலைவர் எஸ்.எம் சபீஸ் கலந்து கொண்டார்
கொரோனா காலத்தில் அர்ப்பணிப்போடு உலமாக்கள் நடந்து கொண்டதையும், கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்கள் உருவாக்கம் செய்து பணி செய்ததையும் போதை வஸ்து ஒழிப்புக்கு உறுதுணையாக இருந்ததையும் இந்த நிகழ்வின் போது உலமாக்கள் நினைவு கூர்ந்தார்கள்.
இங்கு உரையாற்றிய எஸ்.எம். சபீஸ், பள்ளிவாசல்களின் பேஸ் இமாம்களின் ஊதியம் பத்தாயிரமும், பள்ளிவாசல் குளிரூட்டப்பட்ட மின் கட்டணம் இரண்டு இலட்சமும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று இமாம்களின் ஊதியத்தை உயர்வடைய செய்ததையும் நினைவுகூர்ந்தார்.
இந்நிகழ்வில் ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.ஹபீப் றஹ்மானி விசேட அதிதியாக கலந்து கொண்டதுடன் உலமாக்கள், கல்வியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR