ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயம் மடவளையில் திறப்பு
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் காரியாலயம் மடவளையில் உத்தியோகபூர்வமாக இன்று ஞாயிற்றுக் கிழமை (27) மாலை திறந்து வைக்கப்பட்டது.
குறித்த கட்சி அலுவலகம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ரவூப் ஹக்கீம் அவர்களின் சிறப்புரையும் பொதுமக்களுடனான சந்திப்பும் இடம் பெற்றதுடன் இந்நிகழ்வில் கண்டி மாவட்ட வேட்பாளர்கள் அல்ஹாஜ் ஹலீம், பாரத் அருள்சாமி, திலின பண்டார தென்னகோன் மற்றும் மாவட்ட அமைப்பாளர் பஸ்லான் பாருக் ஆகியோருடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முத்தலிப் ஹாஜியார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வசீர் முக்தார் ஆகியோர் கலந்து கொண்டனர்
-:ஹசன் பிராஸ்