News
பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதில்லை ; அதிபர்கள் தீர்மானம்
அதிபர்களின் சம்பளத்துக்குப் பதில் தீர்வுகள் வழங்கப்படும் வரை அரசியல்வாதிகள் பங்கேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என ஏழு அதிபர்கள் சங்கங்கள் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளன.
இது தவிர, ஏழு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அதிபர்களும், பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதில்லை எனவும் தீர்மானித்துள்ளனர்.
அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை குறுகிய கால தீர்வாக அதிபர்களுக்கு அதிபர் கொடுப்பனவு 15,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் சங்கம் தெரிவிக்கின்றது.