கல்முனை ஸாஹிரா ZPL Season 3 இலிருந்து
Zahirian Dynasty அணி திடீர் வெளியேற்றம்!
நடந்தது என்ன ???
காரணம் தெரிவிக்காமல் மௌனம் காக்கும் ஏற்பாட்டுக்குழு
ZPL Season 3 இலிருந்து
Zahirian Dynasty அணி திடீர் வெளியேற்றம்!
நடந்தது என்ன ???
காரணம் தெரிவிக்காமல் மௌனம் காக்கும் ஏற்பாட்டுக்குழு (Committee)
_______________________________
கிரிக்கெட் போட்டியில் வீரர்களுக்கு மற்றும் நடுவர்களுக்கு இடையே முரண்பாடுகள் வருவது சகஜம். அதை தீர்ப்பதற்காக தான் நிர்வாக குழுவே இருக்கின்றது. ஆனால் இவர்களோ பிரச்சினையை தீர்க்காமல் பெரிதாக்கினர்.
ZPL Season 3 கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது Thafai என்ற வீரரின் பந்துவீச்சு முறையற்ற பந்துவீச்சு(Chuck Bowling) என்று கூறப்பட்டது.
Thafai என்பவர் Zahira National College Kalmunai ஐ பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்டம் வரை பந்து வீசிய , விளையாடிய ஒரு சிறந்த வீரர். அதுமட்டுமல்லாமல் எமது பிராந்தியத்தின் பல கிரிக்கட் சுற்றுப் போட்டிகளிலும் பந்து வீசி , விளையாடியும் உள்ளார். அது எவற்றிலும் வராத பிரச்சினை இந்த ZPL season 3 இல் வந்தது எவ்வாறு???
அப்படி விளையாடக்கூடிய ஒருவரின் பந்து வீச்சு முறையற்ற பந்துவீச்சு(Chuck Bowling) என்று பிடிக்கப்படுகின்றது என்றால் பலருக்கும் ஆச்சரியம். இவர் Zahirian Dynasty அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ZPL season 3 இல் விளையாடினார். முதலாவது போட்டியில் எந்த முறையற்ற பந்துவீச்சும் (Chuck bowling) நடுவரால் பிடிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால்
இரண்டாவது போட்டியில் முதலாவது பந்திலே முறையற்ற பந்துவீச்சு (Chuck bowling) நடுவரால் பிடிக்கப்பட்டது.
ஏன் முதலாவது போட்டியில் முறையற்ற பந்து வீச்சு (Chuck bowling) பிடிக்கப்படாமல், இரண்டாவது போட்டியில் முறையற்ற பந்து வீச்சு (Chuck bowling) பிடிக்கப்பட்டதற்கான காரணம் என்ன?
அத்தோடு முறையற்ற பந்துவீச்சு (Chuck bowling) என்று நடுவர் பிடித்தது எந்த விதமான முன் எச்சரிக்கையும் (Warning) கொடுக்காமல். அதன் பின் ZPL Season 3 இல் பந்து வீச முடியாது என்றும் கூறியது.
அது மட்டுமல்லாமல் அத்தொடரில் பல பந்து வீச்சாளர்கள் முறையற்ற பந்துவீச்சு (Chuck bowling) வீசி இருந்தார்கள். அதை Zahirian Dynasty அணியினர் மேல்முறையீடு செய்தும் அவர்களுக்கு எதிராக எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
கணக்கும் இல்லை ஏன்?
மூன்றாவது போட்டி நடைபெற்று இருக்கும் போது சில சலசலப்புக்கள் ஏற்பட்டன. இதேவேளை இரு அணி ஆதரவாளர்களையும் தூண்டி வெளி ஆதரவாளர்களால் பட்டாசுகள் மைதானத்தினுள் கொளுத்தப்பட்டதன் காரணமாக பல குழப்பங்களும் ஏற்பட்டன.
இதனால் போட்டி இடைநிறுத்தப்பட்டு சற்று நேரத்தில் Zahirian Dynasty அணியினரை Disqualify செய்தனர். இரு அணி ஆதரவாளர்கள் குழப்பங்கள் செய்வதற்கு ஒரு அணி மட்டும் பாதிக்கப்படுவது நியாயமா?
இது அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது நடுவர் நீதியாக இருந்திருந்தால் எந்தப் பிரச்சினைகளும் வருவதற்கு வாய்ப்பு வந்திருக்காது. அத்தோடு, இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமான நடுவர், ஒருவரே ஆவார். இதைப்பற்றி மேலும் விசாரிக்கும் போது, இந்த நடுவருக்கு இருக்கும் தனிப்பட்ட கோபத்தை Thafai மேல் காட்டி, அவர் வீசிய பந்தை முறையற்ற பந்துவீச்சு (Chuck bowling) என்று கூறி அவமானம் செய்திருந்தார் என்பது தெரிய வந்தது.
அந்த நடுவர் கழகங்களில் விளையாடக் கூடிய ஒருவர். அவர் அதிகமாக எமது வீரர்களுக்கு எதிராக விளையாடுவதால் தனிப்பட்ட கோபத்தை இவ்விடத்தில் காட்டியுள்ளார் என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது.
அத்தோடு ZPL Season 3 இல் Zahirian Dynasty க்கு எதிராக நிர்வாகம் எடுத்த தீர்மானம் பெரும் தவறு. தீர்மானம் எடுக்கும் போது நடுவர்கள் மற்றும் வீரர்களோடு கலந்தாலோசித்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை பேசித் தீர்த்து விட்டு போட்டியை தொடர்ந்திருக்க வேண்டும்.
அதன்பின் அந்த Zahirian Dynasty அணியினர் அந்த நிருவாகத்தினரிடம் மேல்முறையிட்டபோது அவர்களை Disqualify செய்ததற்கான எந்த காரணங்களும் சொல்லாமல் அவர்களை அலைக்களித்து உள்ளனர். அதனால் அவர்கள் அந்த சுற்றுப்போட்டியின் பிழைகளை சமூக வலைத் தளங்களில் சுட்டிக்காட்டினர். Committee வெளியிட்ட Rules இல் குறிப்பிட்ட சில விடயங்களை பிற அணியினர் பின்பற்றாத போதும் அதை கண்டு கொள்ளவில்லை.
இதுவெல்லாம் ஏன் என்று பல கேள்விகளினை வெளியிட்டிருந்தோம் ஆனால், இன்னும் ஏற்பாட்டு குழுவினால் இது சம்பந்தமான எந்த விதமான பதிலும் தரப்படவில்லை.
மாறாக,
மௌனமே தொடர்கிறது…..