ரணில் விக்ரமசிங்கவின் கட்சி நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்று அநுர குமார அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக, பிரதமராக ரணில் ஆட்சியமைப்பார் என அக்கட்சியின் முதன்மை வேட்பாளர் தெரிவிப்பு
ஹஸ்பர் ஏ.எச்_
இம் முறை திருகோணமலை மாவட்டத்தில் சஜீத், ஹக்கீம், ரிசாட் போன்றோர்களுக்கு வாக்குகள் இல்லை என புதிய ஜனநாக முண்ணனியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.கிண்ணியாவில் இன்று (31) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் அடியும் உதையும் கொடுத்து வருகின்ற போது மக்கள் மத்தியில் சிலிண்டருக்கு வாக்குகள் காணப்படுகிறது .
சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற நாம் கிராமம் கிராமமாக வீடு வீடாக செல்கிறோம் .
இம் முறை தேர்தலின் பின் ரணில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முண்ணனி நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்று அநுர குமார அரசாங்கத்துடன் பங்காளிக் கட்சியாக பிரதமராக ரணில் ஆட்சியமைப்பார் .
கடந்த ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து தேசிய மட்டத்தில் கருத்து கூற தெரியாதவர்கள் தங்களின் சுய இலாப அரசியலுக்காக அநுரவுடன் இணைந்து அமைச்சரவையில் ஆட்சியமைப்போம் என கூறுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.