ஜனாதிபதி அனுர குமாரவின் பேச்சிற்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லை !!

உழைக்கும் மக்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என எதிர்கட்சியில் இருக்கும் போது கோஷம் எழுப்பிய அனுர குமார திஸாநாயக பதவிக்கு வந்ததும் முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் சலுகை வழங்க ஆரம்பித்துள்ளதாக கண்டி மாவட்ட பொதுஜன பெரமுன வேட்பாளர் ரிஷாட் மஃரூப் குறிப்பிட்டார்.
கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த காலங்களில் பெட்ரோல் ஒக்டேயின் 95 மற்றும் சூப்பர் டீசல் விலைகள் குறைக்கப்பட்ட் போது முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் சலுகை வழங்குவதாக கூறிய அனுர குமார ஆட்சிக்கு வந்ததும் அதே விடயத்தை செய்வது வியப்பாக உள்ளதாக ரிஷாட் மஃரூப் குறிப்பிட்டார்.
நாட்டில் நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக 92 ஒக்டேயின் பெற்றோலையும் டீசலையுமே பயன்படுத்துவதாக கூறிய அவர் பெட்ரோல் ஒக்டேயின் 95 மற்றும் சூப்பர் டீசல் வசதி படைத்தவர்கள் அதிகம் பாவனை செய்வதாக ரிஷாட் மஃரூப் குறிப்பிட்டார்.

