இரண்டு பேரும் நிறுத்துங்க ; வலியுறுத்துகிறார் நாமல்
அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பதாக வாக்களித்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் தற்போது அரசு ஊழியர்களை தவறாக வழிநடத்துவதை நிறுத்துமாறு நாமல் ராஜபக்சே தெரிவித்தார்
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பு தொடர்பில் தமது நிலைப்பாட்டை SLPP தேசியப் பட்டியல் உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார்.
சமூக ஊடக தளமான X இல் சமீபத்திய பதிவு ஒன்றில், இரு தலைவர்களும், அந்தந்த தேர்தல் பிரச்சாரங்களில், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக உறுதியளித்ததாகக் கூறினார்கள் ஆனால் இரு தலைவர்களும் இப்போது பொறுப்பைத் திசைதிருப்புவதால், பிரச்சினை முற்றி சென்றுவிட்டது.
இந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவலை தெரிவித்த அவர், அரசாங்க ஊழியர்களை நாட்டின் “முதுகெலும்பு” என்று தெரிவித்தார்
“அவர்களை தவறாக வழிநடத்துவது அவர்களுக்கு விரக்தியையும் கொந்தளிப்பையும் மட்டுமே ஏற்படுத்தும்” என்று நாமல் ராஜபக்சே எச்சரித்தார்.
ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தனது பிரச்சார வாக்குறுதிகளை மதிக்குமாறு அவர் தெரிவித்த அதேவேளை, அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பான இந்த விடயத்தில் தெளிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் தகுதியுடையவர் ஜனாதிபதி என அவர் மேலும் வலியுறுத்தினார்.