பாவனையற்ற கிணற்றினுல் தவறி விழுந்து மூன்று வயது சிறுவன் பலி!

(ஏறாவூர் நஸீர் -ISD)
தீபாவளி தினமான நேற்று (31/10) மாலை குளிப்பதற்காக தாயை காத்திருந்த சிறுவனே கிணற்றில் தவறி விழுந்து மரணமானவர் ஆவார்.
நேற்று (31/10) மாலை பாவனையற்ற கிணற்றுக்கு அருகாமையில் உள்ள குழாய்நீரில் தனது ஆடைகளை கழுவச்சென்ற தாயிடம், “நீயும் அம்மாவிடம் சென்று குளித்துவிட்டு வா மகன் ” வந்ததும் பட்டாசு கொழுத்துவோம் என்று கூறி மகனை தந்தையானவர் அனுப்பி வைத்துள்ளார்.
ஆடைகள் கழுவி முடிந்ததும், குழந்தையின் தாய் மகனை அவ்விடத்தில் நிற்குமாறு சொல்லிவிட்டு ஆடைகளை உலரப்போட சென்றுள்ளார்.
ஐந்து நிமிடங்களில் மகனுக்கு குளிப்பதற்காக குறித்த இடத்துக்கு தாய் வந்த போது , அங்கு மகனை காணாததால் பல இடங்களிலும் தேடியும் காணாததால், இறுதியில் மகனின் காலடியை நோக்கி நடந்து சென்றபோது குழாயிலிருந்து சுமார் 21 அடி தூரத்திலுள்ள பாவனைற்ற கிணறுவரைக்கும் காலடி காணப்பட்டதால் குறித்த நீர் நிறைந்த கிணற்றினுல் எட்டிப் பார்த்த போது மகனின் தலை தெரிவதை கண்டு சப்தமிட்டு கணவரை அழைக்க பலரும் ஓடி வந்து மகனை மீட்டெடுத்து மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது ,கடமையிலிருந்த வைத்தியர் “குழந்தை மரணமடைந்திருப்பதை ” உறுதிப்படுத்தியுள்ளார்.
பாவனையற்ற கிணற்றை துருப்பிடித்த தகரத்தினால் மூடியும் பலமற்ற ஏணியொன்றும் அதில் சாத்தியும் வைக்கப்பட்டிருந்ததால் இக் குழந்தை அதில் ஏறி தவறி விழுந்தே நீரில் மூழ்கி மரணித்திருக்கிலாம் என பெற்றோர் தெரிவித்தனர்.
வந்தாறுமூலை, பலாச்சோலையை சேர்ந்த பிரதீஸ்வரன் பரமேஸ்வரி தம்பதிகளின் ஒரேயோரு மகனான ரோஹித் என்ற சிறுவனே மரணடைந்தவராவார்.
சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு ஏறாவூர் பொலிசாருடன் வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் ,முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேதத்தை அனுப்பிவைத்து ,இன்று (01/11) உடற்கூற்று பரிசோதனை முடிவுற்றதும் பிரேதத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.



