வடக்கு முஸ்லிம் இனச்சுத்திகரிப்பின் 34 ஆவது நினைவு கூறல்
கலாபூஷணம் பரீட் இக்பால்
வட மாகாண முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக தமிழீழ விடுதலைப்
புலிகளினால் குறுகிய மணி இடைவெளியில் ஈன இரக்கமின்றி வடக்கை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்களை துடைத்தெறிந்து 34 ஆவது ஆண்டு நிறைவு ஒக்டோபர் 30ஆம் திகதி நினைவு கூறப்பட்டது. இதையொட்டி முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் சர்வதேச மனித உரிமை அமைப்பின் செயல்பாட்டாளரும் பி. எஸ். எம். சரபுல் அனாம் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்பின் பணிப்பாளர் யாழ்.முஸ்லிம் ஒன்றியம் அல்துல் பரீட் ஆரிப் ஆகிய இருவரும் யாழ் முஸ்லிம்கள் சார்பாக 1990 ஆம் ஆண்டு தொடக்கும் இன்று வரை யாழ்ப்பாண முஸ்லிம்களின் துயரங்களை பத்திரிகையாளர் மகாநாட்டில் எடுத்துரைத்தார்கள். சரபுல் அனாம் தொடர்ந்து பேசுகையில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்ட விடயத்தை தெளிவாக எடுத்துரைத்தார். 34 வருடம் கடந்தும் மாறி மாறி வந்த அரசாங்கத்தினால் இதுவரை எந்தவிதமான நஷ்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை. யாழ்ப்பாண முஸ்லிம்களுடைய மீள்குடியேற்றம் எட்டாக் கனியாக இருப்பதாக கூறினார். வீட்டு திட்டங்களும் சரியான முறையில் எமது சமூகத்திற்கு கிடைக்கவில்லை என்ற விடயத்தையும் யாழ்ப்பாண முஸ்லிம்களுடைய சகல விடயங்களும் இழுபறியாக இருப்பதாக மிக கவலையோடு கூறினார். அதனைத் தொடர்ந்து ஆரிப் அவர்கள் பேசுகையில் 34 வருடம் கடந்தும் பள்ளிக்குடா, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் முஸ்லிம்களுடைய காணி அபகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை கொடுக்க அங்குள்ள அதிகாரிகள் மறுப்பதாகவும் அந்த காணி உரிமையாளர்கள் பல தடவை வந்தும் அவருடைய காணிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் வளமான முஸ்லிம்களுடைய செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும் அண்மையில் கிளிநொச்சி காணி உரிமையாளர்கள் பத்திரிகையாளர் மகாநாடு நடத்தப்பட்ட போது அந்த செய்திகள் வடக்கு பத்திரிகையில் வரவில்லை என்றும் தென்னிலங்கை பத்திரிகையில் அந்த விடயங்கள் வந்ததாக ஆதாரத்துடன் செய்தித்தாளை காட்டினார். இந்த அக்டோபர் விடயத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு தமிழ் ஆட்சியாளர்களை சார்ந்ததாகும் என கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில் நிர்க்கதியாகச் சென்ற யாழ்ப்பாண முஸ்லிம்களை இரு கரம் கொண்டு வரவேற்ற புத்தளம் மக்களை பாராட்டியதோடு மறைந்த முன்னாள் பாராளுமன்ற மர்ஹூம் டாக்டர் இல்யாஸ் அவர்களையும் நினைவு கூறினார்.
கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்.