News
VIDEO > நாவலப்பிட்டி பிரதேசத்திற்கு வருகை தந்த ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு

சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பில் ஜெரோம் பெர்னாண்டோ நாவலப்பிட்டி பிரதேசத்திற்கு வந்ததையடுத்து, அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் நாவலப்பிட்டி கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
நாவலப்பிட்டி பிரதேசவாசிகள் ஜெரோம் பெர்னாண்டோ ஒரு மத ஸ்தலத்தை கட்டத் திட்டமிட்டதாகக் கூறினர்.
நாவலப்பிட்டி பொலிஸார் தலையிட்டு ஜெரோம் பெர்னாண்டோவுக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தணித்தனர்.

