“அழுத்தங்களின் காரணமாக NPP தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதை பார்க்கும் போது பலமான எதிர்கட்சியின் தேவையை உணர்த்துகிறது.”
தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் தங்களது நிலைப்பாடுகளை மாற்றி மாற்றி முன்னுக்குப்பின் முரணான பல விடயங்களை NPP கூறிவருகின்றது என்ற நியாயமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற இக்காலத்தில் அவ் அழுத்தங்கள் காரணமாக தங்களது நிலைப்பாடுகளை மாற்றி கருத்துக்களை NPP தெரிவிப்பதானது பாராட்டத்தக்கதாகும் அதேவேளை பலமான எதிர்கட்சியின் தேவையையும் உணர்த்தியுள்ளது.
உதாரணமாக,
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று NPP முன்வைத்திருந்த நிலைப்பாட்டை ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் மாற்றி நீக்குவதா? இல்லையா? என்று பரிசீலிப்போம் என்று கூறிவந்தனர். இதனை பலர் பொதுவெளியில் சுட்டிகாட்டியபோது தற்போது NPP யின் மீண்டும் நிலைப்பாட்டை மாற்றி நாங்கள் PTA வை நீக்குவோம் என்று தற்போது கருத்தாக வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
அதேபோன்று முஸ்லீம் தனியார் சட்டங்கள் தொடர்பான NPP யினரின் நிலைப்பாடாக முஸ்லீம் விவாவக, விவாகரத்து தொடர்பான முஸ்லீம் தனியார் சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்படும் என்ற தங்களது நிலைப்பாட்டை மாற்றி தற்போது பல்வேறு அழுத்தம் காரணமாக அவ்வாரன சட்டங்களை நீக்கமாட்டோம் என்று தற்போது ஊடக அறிக்கையை கூட வெளியீட்டுள்ளனர்.
உண்மையில் இவ்வாறான நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றமானது தேர்தல்களை மையமாக கொண்ட மாற்றமாக இல்லாமல் இதயசுத்தியுடனான சமூக நோக்கின் அடிப்படையில் நிரந்தரமான நிலையான நிலைப்பாட்டு மாற்றமாக இருக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் .
இதனால்தான் நாம் கூறிவருகின்றோம்,
எல்லோரும் மனிதர்கள் என்ற ரீதியில் அதிகமான அபரிவிதமான அதிகாரங்கள் மனிதனை கெடுக்கும் என்ற பொதுவான விதியுண்டு. அதேபோன்று கடந்த காலங்களில் jvp தொடர்பாக வன்முறைகள், அரசியல் தவறுகள் என்று அடையாளப்படுத்தப்படுகின்ற விடயங்களும் இருக்கின்ற அதேவேளை தற்போது தேர்தலுக்கு முன்பும், பின்பும் என்ற ஒரு விடயத்தில் வெவ்வேறு நிலைப்பாடுகளை முன்னுக்குபின் முரணாக கூறவும் தொடங்கி தற்போது பல அழுத்தங்கள் காரணமாக நிலைப்பாடுகளை மாற்றியும் கூறுகிறார்கள்.
இதனால் எல்லாவகையான அதிகாரங்களையும் மொத்தமாக ஒரு குழுவிடம் நாம் வழங்குவது கூட பாதுகாப்பு இல்லை.
ஆகவே கண்மூடித்தனமான ஆதரவும் பிழையானது, அதேபோல் கண்மூடித்தனமான எதிர்ப்பும் பிழையானது என்ற அடிப்படையில் நியாயமான விமர்சனங்கள், அறிவுபூர்வமான தெளிவுபடுத்தல்களை நாம் எப்போதும் முன்வைத்துக் கொண்டே இருக்கின்றோம்.
இவ்வாறான அழுத்தங்கள் சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள்வாயிலாக மாத்திரமல்லாது அமைய இருக்கின்ற பாராளுமன்றத்தில் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான சூழ்நிலைகளை மக்களாகிய நாம் இத்தேர்தல் மூலம் பொருத்தமான பலரை NPP க்கு வெளியிலுள்ள வேறு கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகளையும் தேடி இதற்கான அதிகாரத்தை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது.
MLM.சுஹைல்