தேர்தலில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அரசியலில் ஓரங்கட்டப்படுவார்கள் – NFGGயின் வேட்பாளர்கள் தெரிவிப்பு
(பாறுக் ஷிஹான்)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியாகிய (NFGG) நாம் கடந்த 18 வருடங்களாக நேர்மை, மக்கள் நலன், வாழல் மோசடிகள் அற்ற நல்லாட்சி மாற்றம் என தொடர்ச்சியாக குரல்கொடுத்தும், பாடுபட்டும் வருகின்றோம். இதன் தொடர்ச்சியாகவே இம்முறையும் நாம் தேசிய அளவில் 4 மாவட்டங்களிலே “இரட்டைக் கொடி” சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகின்றோம். அந்த வகையில் அம்பாறை மாவட்டத்திலும் எமது கட்சி தனியாக போட்டியிடுகின்றது.திகாமடுல்ல மாவட்டம் பாராளுமன்றத் தேர்தல் -2024 ல் இரட்டைக் கொடி சின்னத்துக்கு வாக்களித்து எமது வாக்குகளை பெறுமதி மிக்கதாக மாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய மன்னணி வேட்பாளர்கள் தெரிவித்தனர்.
அம்பாறை ஊடக மையத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சமகால அரசியல் தொடர்பாக நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக போட்டியிடும் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களான எம்.எச். ரிஸ்வானுல் ஹக் மற்றும் வேட்பாளர் ஏ.எச.எம்.பரீட் ஆகியோர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
அங்கு அவர்கள் தத்தமது கருத்துக்களில் மேலும் தெரிவித்ததாவது
திகாமடுல்ல மாவட்டம் பாராளுமன்றத் தேர்தல் -2024 ல் இரட்டைக் கொடி சின்னத்துக்கு வாக்களித்து எமது வாக்குகளை பெறுமதி மிக்கதாக மாற்ற அனைவரும் முன்வர வேண்டும்.நல்லாட்சிக்கான தேசிய முன்னணியாகிய (NFGG) நாம் கடந்த 18 வருடங்களாக நேர்மை, மக்கள் நலன், வாழல் மோசடிகள் அற்ற நல்லாட்சி மாற்றம் என தொடர்ச்சியாக குரல்கொடுத்தும், பாடுபட்டும் வருகின்றோம். இதன் தொடர்ச்சியாகவே இம்முறையும் நாம் தேசிய அளவில் 4 மாவட்டங்களிலே “இரட்டைக் கொடி” சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகின்றோம். அந்த வகையில் அம்பாறை மாவட்டத்திலும் எமது கட்சி தனியாக போட்டியிடுகின்றது.
இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலானது, கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகும். இதுவரை காலமும் எமது நாட்டிலே நிலவி வந்த ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு அந்த ஆட்சியாளர்களையே விரட்டி அடித்த மக்கள் புரட்சி 2022ல் இடம்பெற்றது.மக்கள் வேண்டிநிற்கின்ற ஆட்சி முறை மாற்றத்திற்கான இரண்டாவது முக்கியமான தேர்தலாக எதிர்வரும் பொதுத்தேர்தல் அமைந்துள்ளது. மாற்றத்திற்கான முதலாவது தேர்தலான, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, 42%மக்கள் NPPக்கு வாக்களித்த நிலையில் அனுர குமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
அத்துடன் மக்களின் எதிர்பார்ப்பை அவர் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். இருந்த போதிலும் கடந்த ஒரு மாத கால அனுபவம் இந்த புதிய ஆட்சியின் சில தடுமாற்றங்களையும் தாமதங்களையும் நமக்கு உணர்த்துகிறது. எனவே எதிர் வருகின்ற தேர்தலை மக்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துகின்ற ஒரு தேர்தலாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.கடந்த தேர்தலின் போது நாம் ஒரே ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு மாத்திரமே எங்களிடம் இருந்தது. எனினும் தற்பொழுது 225 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு எம்முடன் உள்ளது.
இம்முறை நாம் தேர்வு செய்கின்ற உறுப்பினர்கள், ஆட்சியாளர்கள் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்றபோது அதற்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடியவர்களாகவும், அதே நேரம் மக்களின் எதிர்பார்ப்புகள் புறக்கணிக்கப்படுகின்ற போது அதனை தைரியமாக சுட்டிக்காட்டுகின்ற, அதற்காக குரல்கொடுக்கின்ற ஒரு சுயாதீனமான, தனித்துவமான பிரதிநிதியாகவும் இருத்தல் வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் இருந்தும் இந்த மாற்றத்திற்குரிய சுயாதீனமான பிரதிநிதிகளை நாம் தேர்வு செய்வதற்கான வாய்ப்பினை NFGG கொண்டு வந்துள்ளது. இதனை நமது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
துரதிஷ்டவசமாக, கடந்த காலங்களில் நாம் தெரிவு செய்து அனுப்பிய நமது பிரதிநிதிகள் மக்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை. மக்களுக்கும் தேசத்துக்கும் விரோதமான சட்டங்களுக்கு ஒத்துழைக்கின்றவர்களாக பல தடவைகளில் இருந்துள்ளார்கள். மீண்டும் மீண்டும் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு சென்ற போதிலும் கூட மக்களுக்கான பல்வேறு பிரச்சினைகளும் நிரந்தர தீர்வுகள் இன்றிய பிரச்சினைகளாகவே இன்னும் இருக்கின்றன.
தேசத்தின் நலனில் அக்கறை கொண்டு அவர்களால் இன்னுமே சுயமாக எழுந்து நிற்க முடியவில்லை. ஆட்சியாளர்களின் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்காக அவர்களால் குரல் கொடுக்கவும் முடியவில்லை.
எனவேதான் இத்தேர்தலில் ஊழல், மோசடிகளில் மூழ்கியிருந்தவர்கள் அரசியலில் இருந்தே ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள். இன்னும் இருப்பவர்களும் இந்த பொதுத் தேர்தலுடன் ஓரங்கட்டப்படுவார்கள்.இந்நிலையில், இந்த பொதுத் தேர்தலில் நாம் நமக்கான பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பது எப்படி? என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.ஊழல், மோசடி அற்றவர்கள்,புத்திஜீவிகள்,நாட்டுப் பற்றுள்ளவர்கள்.சமூக அக்கறையுள்ளவர்கள் என நாம் தேர்வு செய்யும் உறுப்பினர்கள் அனைத்துத் துறையிலும் பொருத்தமானவர்களாக இருக்க வேண்டும்.எனவே தான் இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்குகளை மிகப் பிரயோசனமான ஒன்றாக மாற்றிக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை NFGG அம்பாறை மாவட்டத்தில் ஏற்படுத்தி தந்துள்ளது.
கடந்த 18 வருட வரலாற்றினை கொண்ட NFGG மக்கள் நலன் சார்ந்த அரசியலை முதன்மைப் படுத்தி உறுதியாக உழைத்து வந்திருக்கிறது. பெரும் பெரும் அதிகாரங்கள் இல்லாத போதிலும் கூட ஊழல் மோசடிகளுக்கு எதிராகவும் மக்களின் நலனுக்காகவும் துணிச்சலாக குரல் கொடுத்திருக்கிறது. அறிவுபூர்வமாக மக்களை வழி நடாத்துதல், பிரதேச-வாதம் இனவாதம் கடந்து மக்களை ஒற்றுமைப்படுத்துதல், அரசியலை வருமானம் தரும் தொழிலாகவன்றி சமூகப் பொறுப்பாக நிறைவேற்றுதல், போன்ற புதிய அரசியல் கலாச்சாரங்களை எமது கட்சி நடைமுறைப்படுத்தி வருகிறது. தனி நபர் கைகளில் அதிகாரம் குவிக்கப்படாத கூட்டு தலைமைத்துவ ஒழுங்கு, பதவிகள் யாருக்கும் நிரந்தர சொத்து அல்ல என்கின்ற சுழற்சி முறை பதவி பங்கீடு என்ற பல முற்போக்கு விடயங்களையும் எமது கட்சி கொள்கையாகவும் நடைமுறையாகவும் கொண்டுள்ளது.
சர்வதேசம் வரை சென்று ஜெனிவாவிலும் நமது மக்களுக்காக பேசிய கட்சியாக NFGG இருக்கிறது. இன்று மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி முறை மாற்றத்தை பல வருடங்களாகவே தமது கொள்கையாக கொண்டு இயங்குகிற கட்சியாகவும் அது இருக்கிறது.அந்த வகையில் எதிர்வரும் தேர்தலில் மிகச் சிறந்த தெரிவாக NFGG கட்சி மக்கள் முன் தன்னை முன்னிறுத்தி உள்ளது.அதேபோன்று மக்கள் நலனுக்காக தன்னலமின்றி உழைக்கக்கூடிய வேட்பாளர்களையும் நாம் இந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சி சார்பாக நிறுத்தி உள்ளோம். எதிர்வரும் தேர்தலில் நாம் காத்திருந்த ஆட்சிமுறை மாற்றத்திற்கான பங்களிப்பினை அர்த்த பூர்வமாக ஒன்றாக செய்வோம். அதே நேரம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறுகிற போது அதற்கு எதிராக எழுந்து நின்று சுயாதீனமாக குரல் கொடுக்கக் கூடிய தகுதியும் ஆளுமையும் உள்ள பிரதிநிதிகளையும் உருவாக்குவோம்.
குறிப்பாக, இந்தத் தேர்தல் என்பது ஆளும் கட்சிக்கான அலையொன்று இருப்பதாக காட்டப்பட்டாலும், சமூகமாக நாம் நமக்கானவர்களை பிரதிநிதிகளாக தேர்வு செய்து கொள்வதில் மிக உறுதியாக இருக்க வேண்டும். இதற்குரிய தகுதியும் உரிமையும் கொண்ட NFGG கட்சியின் இரட்டை கொடி சின்னத்துக்கு எமது வாக்குகளை வழங்கி அவற்றை பெறுமதி மிக்கதாக மாற்றுவோம் என குறிப்பிட்டனர்.