இஸ்ரேல் இராணுவத்தினர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேய்ட்லண்ட் பதவி நீக்கம் செய்தது ஏன் என்ற சர்ச்சை வெடித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து நெதன்யாகு தெரிவித்ததாவது, ”கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் மீது வைத்திருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்த காரணத்தினாலேயே பதவி நீக்கம் செய்ததாக” இஸ்ரேல் பிரதமர் தெரிவித்திருந்தார்.
ஆனால், 2023 ஆம் ஆண்டு காசாவில் போர் ஆரம்பிப்பதற்கு முன்பு, கருத்து வேறுபாடு காரணமாக கேலண்ட்டை நெதன்யாகு பதவியில் இருந்து நீக்கிய சமயம் மக்களின் போராட்டத்தால் அவர் மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
அதேபோல நேற்றும் பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கம் செய்துள்ளார்
இதனைத் தொடர்ந்து, பொது மக்களும் இஸ்ரேல் இராணுவத்தினரும் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
பதவி நீக்கம் செய்தது குறித்து கேய்லண்ட் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
“இஸ்ரேலின் பாதுகாப்பு தான் என்னுடைய வாழ்க்கையின் இலக்காக இருந்தது. அதுவே என் வாழ்நாள் முழுவதும் இலக்காக இருக்கும் எனவும் மூன்று முக்கியமான விவகாரங்களில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்” அவர் பதிவிட்டிருந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதமர் நாட்டை முழு அழிவிற்கு கொண்டு செல்கிறார் அதனால் அவர் உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் எனவும் மக்கள் நலனை மட்டும் சிந்திக்கும் ஒருவர் தான் இந்த நாட்டை ஆள வேண்டும் எனவும் போராடி வருகிறார்கள்.
மேலும், காசாவுக்கு எதிரான இஸ்ரேல் போருக்கு ஆதரவளிக்கும் முக்கியமான நாடான அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற நாளன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று சில இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.