கண்டி மாவட்ட மக்கள் ஏன் ரவூப் ஹக்கீமுக்கு வாக்களிக்க வேண்டும்?

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (பீ.ஏ)
இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் ரீதியாக தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தகுதியானவர் யார்? என்று வினா எழுப்பினால், 30து வருட பாராளுமன்ற அனுபவமுடைய, அரசியல் முதிர்ச்சி மிக்க, கடந்த கால நெருக்கடிகளின் போது உறுதியான குரலாக பாராளுமன்றத்திலும்,வெளியிலும்,சர்வதேச இராஜதந்திரிகள் மட்டத்திலும்,சர்வதேச ஊடகங்களிலும் ஒலித்த ரவூப் ஹக்கீம் தான், என்பது பலரது பதிலாகும்.
ரவூப் ஹக்கீம் என்பவர் ஒரு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமல்ல, முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் உரிமை இழந்து,நாதியற்ற சமூகமாக போய்விடக்கூடாது, இளைஞர்கள் தவறான வழிக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக பல உயிர்கள்,உடமைகள்,பொருளாதாரங்கள் இழக்கப்பட்டு உருவாகிய கட்சியின் தலைவர், ஒரு சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகும்.
இவ்வாறான, ஆளுமையான தலைமையை பாதுகாக்கும் கடமை எல்லோருக்கும் இருக்கத்தக்கதாக, அந்த வாய்ப்பு கண்டி மக்களுக்கு கிடைத்திருக்கிறது. இதில் குறிப்பாக முஸ்லிம் சமூகம் கவனம் எடுக்கவேண்டும்.
கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய மோசமான பிரச்சினைகளின் போது, குறிப்பாக முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என இனவாதிகள் முத்திரை குத்த முயன்ற சந்தர்ப்பத்தில் பல முஸ்லிம் தலைவர்கள் அச்சத்தால் மௌனித்திருந்தவேளை ,சமூக உணர்வோடு ” இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை போதிக்கவில்லை,முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல, முஸ்லிம் சமூகதுதிற்கு மத்தியிலிருந்த ஒரு சிறு கும்பலை வெளியிலிருந்து யாரோ ஒரு சாரார் தங்களின் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டார்கள், குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு இறந்தவர்களை முஸ்லிம் மையவாடியில் அடக்குவதற்கும் முஸ்லிம் சமூகம் தயாரில்லை என்பதனூடாக தீவிரவாதத்திற்கும்,தீவிரவாதிகளுக்கும் எதிரான சமூகம், முஸ்லிம் சமூகம் என்பதை தேசியத்திற்கும், சர்வதேசத்திற்கும், தன்னிடமுள்ள அரசியல் அனுபவம்,மொழிப் புலமையைக் கொண்டு உரத்துச் சொன்னவர்தான் ரவூப் ஹக்கீம்.
அன்று இனவாதச் செயற்பாடுகளினால் பெரும் இழப்பு ஏற்படுத்த ஒரு கூட்டம் கண்டியிலிருந்து தயாரான போது, அதனைத்தடுக்கும் நோக்கில் அமைச்சுப் பதவிகளை தானும் துறந்து, மற்றவர்களையும் துறக்கச்செய்து பெரும் கலவரம் ஏற்படுவதைத் தடுத்தவர். பதவி துறந்து அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்தவர் ரவூப் ஹக்கீமாவார்.
கண்டி அக்குறணை, அலுத்கம, போன்ற பல இடங்களில் ஏற்பட்ட கலவரங்களின் போது கலவரங்கள் இடம்பெற்ற இடங்களுக்குச் சென்று இரண்டு,மூன்று இரவுகள் இனவாதிகள் ஏனைய பிரதேசங்களை தாக்க முற்பட்டபோது இனவாதிகளை தடுப்பதற்காகவும்,கலவரம் மேலும் பரவாமல் தடுப்பதற்காகவும் வீதியோரங்களில் கண்காணிப்புகளை மேற்கொண்டார்.
நடந்த அசம்பாவிதங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து,கலவரம் நடந்த இடத்திற்கு பொலிசார் வந்து, அங்குள்ள CCTV வீடியோக்களை ஆராய்ந்து, அதில் 150 மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதையும்,அது தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதையும் அறியலாம்.
இவ்வாறான சம்பவங்கள் நமது தனித்துவத்தையும்,நமக்கான உறுதியான குரலின் அவசியத்தையும் உணர்த்தி நிற்கிறது.
இனவாதம், பேரினவாதிகளால் போசிக்கப்படும் போது, தங்களின் அரசியல் நலன் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் பேரினக்கட்சிகள் மௌனம் காக்கும் போது, சில தேசிய கட்சிகளின் கொள்கைகள் முஸ்லிம் சமூகத்ததிற்கு எதிராக இருக்கும் போது, அவர்களின் கட்சியிலுள்ள. முஸ்லிம் உறுப்பினர்களால் அன்றும் குரல் கொடுக்க அனுமதியில்லை. நாம் அதை கண்ணூடாக கடந்த ஆட்சிக் காலத்தில் பார்த்தோம்.
இன்றும் இடது சாரி ஆட்சி அமைந்திருக்கும் சூழ்நிலையில், இந்த அரசாங்கமும் முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் சட்டமூலங்களோ,தீர்மானங்களோ கொண்டுவந்தால், இந்த கட்சியில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் கட்சி தீர்மானங்களை மீறி ஒன்றுமே செய்யமுடியாது, கட்சி சொல்வதை வேத வாக்காக எடுத்து செய்வதாக தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் மேடைகளில் பேசுவதையும் காணமுடிகிறது. இவ்வாறானவர்களா சமூகத்திற்காக குரல் கொடுப்பது?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமைப் பொறுத்தவரை, அவர் எவருக்கும் கட்டுப்படுபவர் அல்ல, அவர் தனித்துவமானவர், தனிக் கட்சியின் தலைவர் என்பதால் ஏனைய பெரும்பான்மை கட்சிகளில் இருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்று அல்ல, அவர் பாராளுமன்றத்தில் முன்வரிசையில் இடம் கொடுக்கப்படுபவர், தனக்கான நேரத்தை அதிகமாக பெற்று பேசக்கூடியவர், பாராளுமன்ற குழுக்களின் இடம்பெறக்கூடியவர்.
சிறுபான்மை கட்சி தலைவர் என்ற அடிப்படையில் அரசாங்கத்திற்கும்,எதிர் கட்சிகளுக்கும் அவசியமாக தேவைப்படுபவர், வெளிநாட்டு இராஜதந்திரிகள்,முஸ்லிம் நாடுகள் அதிக தொடர்புடையவர், இப்படி பல வாய்ப்புகளை ஒருங்கே பெற்ற தலைவராக காணப்படுவதால், ரவூப் ஹக்கீமின் பேச்சுக்கும்,அவரால் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கும் செவிமடுக்கவேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. அதன் காரணமாக தங்களின் தீர்மானங்களில் விரும்பியோ,விரும்பாமலோ மாற்றங்களை கொண்டுவரவேண்டியும் இருக்கிறது. கடந்த காலங்களில் அவைகளை காணமுடிந்தது.
எனவே, இவ்வாறான வாய்ப்புகளைப் பெற்ற தலைவரை தக்கவைத்து காரியம் சாதிக்காது, முஸ்லிம் சமூகம் சிலரின் காழ்ப்புணர்வான விமர்சனங்களுக்கு செவிமடுத்து இருப்பதை இழந்துவிட்டு ஆபத்துகள் வரும் போது சிக்கித் தவிக்கப் போகிறதா? என்பதை ஒவ்வொரு கண்டி வாழ் முஸ்லிம்களும் சிந்திக்கவேண்டும்.
கடந்த காலங்களில் ஆளும் கட்சியாக இருந்த போதும்,எதிர் கட்சியாக இருந்தபோதும் ரவூப் ஹக்கீம் சமூகத்திற்கு பிரச்சினை வந்தபோது மௌனித்து இருக்கவில்லை,உறுதியான குரலாக நீதி வேண்டி ஒலித்தார் என்பதற்கு பாராளுமன்ற உரைகளும்,சமூக வலைதளங்களும் சான்று பகிர்வதைப்பார்க்கலாம்.
அமைச்சராக இருந்தபோது பல அபிவிருத்தி திட்டங்களை இன,மத வேறுபாடின்றி நாடு முழுவதும் முன்னெடுத்திருந்தார். குறிப்பாக கண்டியில் மேற்கொண்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களில் சிலதை இங்கு தொட்டுக்காட்டுகிறேன்.
*கண்டி பெருநகர் நீர் விநியோகத்திட்டம் (ரூபா 710 கோடிகள்)
*குண்டசாலை வாவின்ன நீர்வழங்கல் திட்டம் (ரூபா 3000 கோடிகள்)
*கண்டி வடக்கு பாத்ததும்பற ஒருங்கிணைந்த நீர்வழங்கள் திட்டம் (ரூபா 5000 கோடிகள்)
*கலகெதர மாவத்தகம நீர் வழங்கள் திட்டம் (ரூபா 312 கோடிகள்)
இது போன்ற பாரிய நிதி ஒதுக்கீட்டில் பல அபிவிருத்தி திட்டங்களும், ஏனைய அவசியமான வடிகான்கள் ,கொங்றீட் பாதைகள்,பாலங்கள், மதஸ்தளங்களுக்கு , பாடசாலைகளுக்கு என பரவலாக கண்டி மாவட்டம் முழுவதும் இன,மத, பேதம் பாராது அபிவிருத்திகளை மேற்கொண்டிருக்கிறார்.
ரவூப் ஹக்கீம் பல விடயங்களில் தனது பார்வையை செலுத்தி இருந்தார்.
தேசிய ரீதியாக சிலதை தொட்டுக்காட்டலாம்:
*நல்லாட்சியில் அரசியல் அமைப்பு மீறப்பட்டு 52 நாள் போராட்டத்தின் போது ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும்,நாட்டின் அரசியல் அமைப்பைப் பாதுகாக்கவும் போராடினார்,நீதி மன்றம் வரை சென்று வெற்றியும் கண்டார்
* நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவிருந்த பாரிய ஈ-வீசா மோசடியை தடுப்பதற்காக அண்மையில் நீதி மன்றம் சென்று தடையுத்தரவுகளைப் பெற்றுக் கொண்டதையும் பார்க்கலாம்.
ரவூப் ஹக்கீமின் இவ்வாறான செயற்பாடுகள் தேசியத்திற்கும்,சர்வதேசத்திற்கும் முஸ்லிம்கள் நாட்டுப்பற்றுள்ளவர்கள் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறது.
சிறுபான்மைத் தலைவராக பெரும்பான்மை மக்களோடும் சிநேகபூர்வமாகப் பழகக்கூடியவராக ரவூப் ஹக்கீம் காணப்படுகிறார். இவ்வாறான செயற்பாடுகள் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், இனவாதமற்ற நாட்டைக் கட்டியெழுப்புவற்கு உதவியாக அமையும்.
இவ்வாறு ரவூப் ஹக்கீமுக்கு வாக்களிக்கவேண்டும் என்பதற்கு பல விடயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
எனவே, கண்டி மக்கள்,குறிப்பாக கண்டி வாழ் முஸ்லிம் சமூகம் ஒரு பிரதிநிதியை பெறும் முயற்சி என்பதை விட ,ரவூப் ஹக்கீம் சமூகத்திற்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை உணர்ந்து அதிகளவான வாக்குகளை டெலிபோன் சின்னம், 2 ஆம் இலக்கத்திற்கு இட்டு, அவரின் வெற்றியை அதிகளவான வாக்குகளால் உறுதிப்படுத்தவும். மாறாக சில சுயநலவாதிகள் ,சிலரின் அஜந்தாக்களுக்கு துணை போய் ரவூப் ஹக்கீமை தோற்கடிக்கனும் என்ற ஒரே நோக்கத்தில் வெல்லமுடியாது என்று தெரிந்தும் முஸ்லிம் வாக்குகளை சிதறடித்து தங்களின் எண்ணத்தை நிறைவேற்ற சுயற்சைக் குழுவாகவும்,ஏனைய கட்சிகளிலும் வந்திருக்கிறார்கள்.
இவ்வாறானவர்களின் போலி பிரச்சாரங்களுக்கு செவிசாய்த்து தயவு செய்து இருப்பதை இழக்கச் செய்து, முஸ்லிம் சமூகத்தை நாதியற்ற சமூகமாக மாற்ற நினைக்கும் அந்நிய சக்திக்கு துணைபோகதீரர்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டோ, பராமுகமாகவும் இருந்துவிடாதீர்கள் 1956 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தக்கவைக்கப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம்தை இழக்கும் அபாயமும் இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு செயற்படுங்கள்.

