News
உகண்டா பணத்தை கண்டுபிடிக்காமல், பொய் சொன்னது யார் என்பதை கண்டு பிடிக்க சண்டையிடுகிறார்கள்..

உகண்டா பணத்தை கண்டுபிடிக்காமல் பொய் சொன்னது யார் என்பதை கண்டு பிடிக்க சண்டையிடுகிறார்கள் என மாத்தாறை மாவட்ட பொதுஜன பெரமுன வேட்பாளர் நிபுன ரனவக குறிப்பிட்டார்.
ஜனாதிபதியும் பிரதமரும் செலவீணங்களை குறைத்துள்ளமை வரவேற்கத்தக்கது என்றாலும் அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
பார் பேர்மிட் பெற்றவர்களின் பெயர்களை வெளியிடுவோம் என சூளுரைத்தவர்கள் தற்போது அதற்கு நல்ல சகுனம் பார்க்கிறார்களா என அவர் கேள்வி எழுப்பினார்.

