News
ஒரே இடத்தில் இரு வாரங்களில் மூன்று விப*த்துக்கள் – இன்று பெண் ஒருவர் உயிரிழப்பு
கந்தளாய், அக்போபுர கித்துள் ஊற்று பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை (17) காலை இடம்பெற்றுள்ளது .
கந்தளாய் , கித்துள் ஊற்று பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் பயணித்த வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கழகத்தினால், குறித்த வேன் , வீதியோரம் நடந்து சென்ற பெண் மீது மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது .
கித்துல் ஊற்று பகுதியில் அதே இடத்தில் கடந்த பதினைந்து நாட்களில் மூன்று விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அக்போபுர பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .
எப்.முபாரக்