தமக்குச் சொந்தமில்லாத ஐந்து சதத்தைக்கூட எடுக்கவில்லை – இருந்தும் இன்று நாட்டு மக்களிடம் திருடன் என்ற பெயருடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மகிந்த் ராஜபக்ச கவலை வெளியிட்டார்
தனக்குச் சொந்தமில்லாத ஐந்து சதத்தைக்கூட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொள்ளவில்லை என தன்னிடம் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
1970 ஆம் ஆண்டு முதல் நாட்டிற்காக உழைத்த போதிலும் இன்று நாட்டு மக்களிடம் திருடன் என்ற பெயருடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்
அந்த அபத்தமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி விரைவில் சுத்தப்படுத்துவேன் என்று கூறிய போதும் , தான் அவ்வளவு காலம் வாழ முடியுமோ என முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியதாக சாகர காரியவசம் தெரிவித்தார்.
களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசியல் அதிகாரம் பெறுவதற்காக, எந்தத் தவறும் செய்யாத ஒரு மனிதனின் பண்பைக் கொன்று பிணங்களை குவிப்பதை விட பாவம் வேறொன்றுமில்லை என மேலும் தெரிவித்தார்.