நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ள சுமார் நாற்பது பாதாள உலக குழு செயற்பாட்டாளர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு
பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற சுமார் நாற்பது பாதாள உலக குழு செயற்பாட்டாளர்கள் டுபாயிலும் பிரான்ஸின் நான்கு இடங்களிலும் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவர்களை கைதுசெய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதாள உலகக் குழு செயற்பாடுகள் இடம்பெறும் 43 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 43 பாதாள உலகக் குழுகள் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் உள்ளதாகவும், அந்த குழுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாட்டில் ஏனைய பகுதிகளில் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சுமார் 1091 பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.