கண்டி மாவட்ட வாக்காளர்களின் பிரதான தெரிவாக மாறியுள்ள சகோதரர் ரியாஸ் ஃபாரூக் பற்றி…
அன்பான வாக்காளப் பெருமக்களே!
(🧭NPP | ரியாஸ் ஃபாரூக் |இலக்கம் 11)
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாராளுமன்றத் தேர்தலை நாம் 2024 நவம்பர் மாதம் 14 ஆம் திகதி எதிர்நோக்கி இருக்கின்றோம். இத் தேர்தலில் நாம் அளிக்கும் வாக்குகள் எமது நாட்டினதும் எமது சந்ததியினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது.
2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையர் அனைவருக்கும் வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளவே நாம் தோழர் அனுர குமார திசாநாயக்க அவர்களை எமது ஜனாதிபதியாகத் தெரிவு செய்தோம்.
இனி எம் முன்னால் உள்ள பணி தூய்மையானதும் உறுதியானதுமான பாராளுமன்றம் ஒன்றை தேசிய மக்கள் சக்தி அங்கத்தவர்களைக் கொண்டு அமைத்து நாட்டை வளப்படுத்துவதாகும்.
எனவே, 2024 நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள *பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டி சின்னத்துக்கு வாக்களித்து சகோதரர் *ரியாஸ் ஃபாரூக் அவர்களின் 11ம் இலக்கத்துக்கும் ஒரு விருப்பு வாக்கை வழங்குவோம்.
*யார் இந்த ரியாஸ் ஃபாரூக்?*
அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்த இவர் அக்குரணை அஸ்ஹர் கல்லூரியில் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியைக் கற்ற பின், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள HOLMESGLEN COLLEGE OF TAFE கல்லூரியில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் பற்றிய பாடநெறி ஒன்றையும் கற்றார். தற்போது வியாபாரத்துறையில் ஈடுபட்டுள்ளார்.
அரசியல் ரீதியாக மக்கள் விடுதலை முன்னணி யின் நேர்மை மிக்க, மக்கள் நல அரசியலால் ஈர்க்கப்பட்ட அவர் நாட்டின் பொதுப் பிரச்சினைகளின் போதும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போதும் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்காகவும் அராஜகம், அக்கிரமங்கள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதில் முன்நின்று பாடுபட்டவர். அத்தோடு கண்டி மாவட்டத்தின் திகன, அக்குரணை போன்ற பகுதிகளில் இனவாத வன்முறைகளால் மக்கள் பாதிக்கப்பட்ட போது தனது கட்சி அங்கத்தவர்களுடன் இணைந்து கட்சித் தலைமையை வரவழைத்து மக்களின் துயரங்கள் குறித்து நேரில் அவதானிக்க வைத்து அது குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றவும் ஏற்பாடு செய்தவர்.
எனவே, தேசிய மக்கள் சக்தியின் *திசைகாட்டி* சின்னத்துக்கு வாக்களித்து சகோதரர் *ரியாஸ் ஃபாரூக்* அவர்களின் *11ம்* இலக்கத்துக்கும் ஒரு விருப்பு வாக்கை வழங்குவோம்.