News
NPP வேட்பாளர் ரிஸ்வி சாலி கோவிலில் ஆசி பெற்றதாக பரவும் செய்தி தொடர்பான விளக்கம்..
நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக NPP யின் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களாக Dr ரிஸ்வி சாலிஹ் உள்ளிட்டவர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த 24.10.2024 அன்று வஜிர பிள்ளையார் கோவிலுக்கு சென்று ஆசிகளை பெற்றுக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த புகைப்படங்கள் இன்று நடைபெற்ற சம்பவம் போன்று மடவளை நியுஸ் பெயரைப் பயன்படுத்தி சிலர் வெளியிட்டுள்ளனர்.
நாம் இன்று அப்படியொரு சம்பவம் இடம்பெற்றதாக எந்த செய்திகளையும் வெளியிடவில்லை என்பதுடன், குறித்த சம்பவம் 10 நாட்களுக்கு முன்னர் நடைபெற்றதாகும்.
குறித்த புகைப்படம் மற்றும் செய்திகளை கொழும்பு மாவட்ட NPP வேட்பாளர் ராய் பல்தசார் அவர்களின் உத்தியோகபூர்வ X பக்கத்தில் பார்க்க முடியும்.