News
தேர்தலில் தோல்வியடைந்த மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்க சஜித் முடிவு
பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் ஊடாக உறுப்புரிமையை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.
தேர்தல் காலத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த தேசியப்பட்டியல் பதவி வழங்கப்படுவதாக மேலும் தெரியவந்துள்ளது