News

புதிதாக பாராளுமன்றம் செல்பவர்களுக்கு 3 நாட்கள் விஷேட செயலமர்வு !

10வது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் திரு.சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

புதிய எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற முறை, பேரவை விவகாரங்கள், குழுக்களின் விவகாரங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என்றார்.

10வது பாராளுமன்றத்திற்கு தெரிவான எம்.பி.க்களின் பதிவு எதிர்வரும் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

அந்த நடவடிக்கைகளுக்காக பல அதிகாரிகள் குழுக்கள் தயார்படுத்தப்படும் என்றும் திரு.குலரத்ன கூறினார்.

I இந்த நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்காக பாராளுமன்ற ஊழியர்களின் விடுமுறைகள் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.

Recent Articles

Back to top button