News
பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த ஹரிகரன் தன்வந்தை பாராட்டிய ஜனாதிபதி
ஹஸ்பர் ஏ.எச்_
பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த 13 வயதான திருகோணமலையை சேர்ந்த ஹரிகரன் தன்வந்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களின் ஏற்பாட்டில் இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மார்ச் மாதம் 1ம் திகதி பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த மாணவனை ஜனாதிபதி இவ்வாறு பாராட்டியதுடன் கடலில் நீந்திய அனுபவங்களையும் கேட்டறிந்து கொண்டதாக அவரது பெற்றார் ஆர்.ஹரிகரன் தெரிவித்தார்.இச் சந்திப்பில் குறித்த சாதனை வீரரின் தாய் தந்தையர் குடும்பஸ்தரும் கலந்து கொண்டனர்.