VIDEO இணைப்பு > இலங்கை 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு: இது ஓர்
உண்மையான மாற்றமா? காதர் மாஸ்டர் (Uk) அலசல்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் புதிய அரசாங்கம் எதிர்நோக்கும் சவால்களும். – லண்டனில் இருந்து காதர் மாஸ்டரின் அலசல்
திருமண உறவால் மடவளை பசாரின் தத்துப்பிள்ளயாக மாறிவிட்ட, லண்டனில் வாழும் காதர் மாஸ்டர் ,முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர். அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, ஆய்வாளர், 18ம் மேற்பட்ட நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியவர். லண்டனில் உள்ள பல தொலைகாட்சிகளில் அடிக்கடி தோன்றி தனது கருத்துக்களை தெளிவாக முன்வைத்தும் பல நாடுகளுக்கு வளவாளராக சென்றும் பரவலாக அறியப்பட்ட இவர் தற்போது – பலரது வேண்டுகோளுக்கிணங்க – தனியான காணொளி ஒன்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் நடத்திவருகிறார்.
இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான “இலங்கை 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு: இது ஓர் உண்மையான மாற்றமா? -காதர் மாஸ்டர்” என்ற அவரது காணொளி தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளவரலாற்று சிறப்புமிக்க
மெகா வெற்றியை ஆராய்கிறது .
அத்துடன் இப்பெரும் வெற்றி அதிக பொறுப்புகளையும், பரந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் கடப்பாடுகளையும் அதன் மீது சுமத்துகிறது என்பதை விளக்குகிறது.
பல்வேறு இன மத சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், NPP பெற்ற வரலாற்று வெற்றியானது, பிளவுபட்ட நாட்டினை ஐக்கியப்படுத்தும் சக்தியாக அதனை நிலைநிறுத்துகிறது என்பதை. சுட்டிக்காட்டுகிறது .
இந்த இலக்கை அடைய, NPP இச் சமூகங்களின் நீண்டகால குறைகளை நிவர்த்தி செய்வதன் மூலமும் அவர்களின் கூட்டு நலன்களைப் புரிந்துகொள்வதன் மூலமும் அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என இது வலியுறுத்துகிறது.
அத்துடன் NPP முன்னால் உள்ள பாரிய சவால்களையும் இது எடுத்துக்காட்டுகிறது.
இன்றைய காணொளி (16.11.2024): ‘இலங்கை 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு: இது ஓர்
உண்மையான மாற்றமா? -காதர் மாஸ்டர்’
අද වීඩියෝව (16.11.2024): ‘ශ්රී ලංකා 2024 පාර්ලිමේන්තු මැතිවරණ ප්රතිඵල: එය සැබෑ වෙනසක් ද? -කාදර් මාස්ටර්’
Today’s video (16.11.2024): ‘Sri Lanka 2024 Parliamentary election result: Is it a real change? -Kader Master’