குவைத்தில் இருந்து வந்த நபரை கடத்தி சென்று பாழடைந்த வீட்டில் வைத்து ஒரு கோடி கப்பம் கோரிய நான்கு பேர்
குவைத் நாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பிய ஒருவரை கடத்தி கப்பம் பெற முயன்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவைத் நாட்டிலிருந்து நாடு திரும்பிய நபரை கடத்திச் சென்று மாவத்தகம நாரம்மல பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய வீடொன்றில் அடைத்து வைத்திருந்த நான்கு சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் குவைத்தில் பணிபுரிந்த நிலையில் அவருடன் பணிபுரிந்த மற்றுமொருவரே இந்த கடத்தலுக்கு காரணமானவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒரு கோடி ரூபாயை கப்பம் பெறுவதற்காகவே இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக செயற்பட்ட அதிகாரிகள், குறித்த நபரை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் 31-39 வயதுடைய நாரம்மல மற்றும் கட்டுபொத பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த நபரை கடத்த பயன்படுத்திய கெப் வண்டியும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்