News

அமைச்சராகுவதற்கு தகுதியில்லாத முஸ்லீம் வேட்பாளர்களுக்கு வாக்களித்தது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலா?”

NPP அமைச்சரவை அமைச்சராகுவதற்கு தகுதியில்லாத முஸ்லீம் வேட்பாளர்களுக்கு வாக்களித்தது உண்மையிலேயே நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலா?” என பார்க்க வேண்டியுள்ளது.

ஏனென்றால் NPP ஆதரவாளர்களின் அமைச்சரவை தொடர்பான கருத்து வாதங்களை பார்க்கும் போது அவர்கள் கூறுவதுதான்,

* அமைச்சரவையில் இனவாதம் பின்பற்றப்படவில்லை மாறாக தகுதியான திறமையானவர்களே நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது. இக்கருத்தில் நியாயம் இருக்கிறது. காரணம் அமைச்சர்கள் திறமையானவர்களாகவும், தகுதியானவர்களாகவும் இருப்பதுதான் சிறந்தது.

இவ்வாறானதொரு நிலையில்,NPP யில் வேட்பாளர்களாக உள்வாங்கி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சராவதற்கான தகுதியும், திறமையும் இல்லையென்று NPP ஆதரவாளர்களே நேரடியாக சுட்டிக்காட்டுவதானது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயல்லல்வா?

இதனால்தான் NPP யின் வேட்பாளர் தெரிவில் மாவட்டம் தழுவிய அதிர்ப்தியும், பாராளுமன்ற விடயங்களில் ஆழமாக பங்களிப்புச் செய்யக் கூடியவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்ற திருப்தியின்மை வேட்புமணு சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்தே NPP க்குள்ளும் NPP க்கு வெளியிலும் பரவலாக பேசப்பட்ட விடயமாக இருந்தது.

எதுஎவ்வாறு இருந்தாலும், தற்போதய அமைச்சரவையில் உள்வாங்கப்பட்டிருந்த 21 அமைச்சர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் புதியவர்களாகவும், தேசியப்பட்டியல் மூலமாகவும் தெரிவு செய்யப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். அவ்வாறெனில் ஏன் முஸ்லீம்களில் திறமையும், தகமையும் கொண்டவர்களை தேசியப்பட்டியல் மூலம் உள்வாங்கி அமைச்சராக்க முற்பட்டிருக்கவில்லை?

அமைச்சரவை என்பது இலங்கையின் சட்ட உருவாக்கத்திலும், அரசியல் தீர்மானங்களிலும் அதிகம் தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு அவையாகும். சிலநேரங்களில் பாராளுமன்றத்திற்குச் செல்லாமல் வெறும் அமைச்சரவை தீர்மானங்கள் மூலம் பல விடயங்கள் அமுல்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் கடந்தகாலங்களில் கூட அமுல்படுத்தப்பட்டிருந்தன. உதாரணமாக (ஜனாஸா எரிப்பு, ஈஸ்டர் குண்டு தாக்குதலை மையப்படுத்திய இஸ்லாமிய அமைப்புக்களின் தடை) போன்ற விடயங்களை குறிப்பிட்டுக்காட்டலாம்.

NPP ஆதரவாளர்கள் குறிப்பிடுவதைப் போன்று தற்போதய அமைச்சர்வையில் தகுதியானவர்களும் திறமையானவர்களும் இருக்கிறார் அதனால் இனவாதமற்ற முடிவுகளைத்தான் எடுப்பார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட “நாட்டுநலனை/தேசிய நலனை முன்னிறுத்தி சில தீர்மானங்களை அமைச்சரவை எடுக்கும் போது சில தவறுகள் அல்லது பிழையான தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முனயும் போது எமது முஸ்லீம் தரப்பில் அவ்விடத்தில் ஒருவர் அமைச்சரவையில் இருந்தால் பிழையான தீர்மானங்களின் போது அவர்களுக்கான தெளிவுபடுத்தல்கள் நியாயமாக முன்வைத்து தடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுவது யதார்த்தமானதாகும். இவ்வாற சந்தர்ப்பத்தில் “தலைக்குவந்தது தலைப்பாகையுடன் சென்றுவிடும்”. என்ற புரிதல் எமக்கு இருக்கவும் வேண்டும்.

கடந்த காலங்களிலும் இவ்வாறான சந்தர்ப்பங்கள் நடைபெற்றிருந்தன. உதாரணமாக ஈஸ்டர் குண்டு தாக்குதலை மைப்படுத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அதன் மூலம் இஸ்லாமிய அமைப்புக்கள் பல தரீக்கா அமைப்பு தவிர்ந்த ஜமாஅத்தே இஸ்லாமி, தெளகீத், தப்லீக் போன்ற அமைப்புக்களும், அமைப்புக்களின் செயற்பாடுகளும் அடிப்படைவாதத்தை காரணமாக காட்டி தடைசெய்யப்பட்டு பெண்களின் முகமூடி ஆடை, அகதியா பாடசாலைகளின் செயற்பாடுகளும் கேள்விக்குட்படுத்தப்பட்டு அமைச்சரவையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்வதற்கு விஷேட அமைச்சர்களைக் கொண்ட குழுவின் ஊடாக முன்னாள் அமைச்சர் அலிசப்ரி போன்றவர்கள் முன்நின்று செயற்பட்டதை இங்கு ஞாபகப்படுத்துவது பொருத்தம் என்றும் நினைக்கின்றேன்.

இவ்வாறானவர்கள் ஜனாஸா எரிப்பு தொடர்பான விடயங்கள் வந்தபோது உலக சுகாதார அமைப்பின் (WHO) வின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த பல அழுத்தங்களையும், எதிர்ப்புக்களையும் அமைச்சரவைக்குள் வெளிப்படுத்தி செயற்பட்டார்கள் என்ற விடயமும் இங்கு தெளிவுபடுத்த வேண்டிய விடயமாகும்.

NPP ஆதரவாளர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் ஜனாஸா எரிப்பு வந்தபோது கோட்டாவுக்கு வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவர்களும் என்று எல்லோரும் எதிர்ந்திருந்தார்கள்.

அதேபோன்று அநுர ஜனாதிபதியாக வந்தவுடன் இலங்கையில் இனவாதம் முடிந்துவிட்டதாக கருத முடியாது என்ற நிலையில் நியாயமான இவ்வாறான எதிர்ப்புக்களை அநுரவுக்கு வாக்களித்தவர்களும் வாக்களிக்காதவர்கள் என்று எல்லோரும் எதிர்த்து அரசாங்கத்தை வழிப்படுத்த முன்வர வேண்டும்.

MLM.,சுஹைல்

Recent Articles

Back to top button