கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மேலதிகமான நெல் எங்கே ?
குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சதொச மற்றும் அரச வர்த்தக (இதர) சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக, வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
கடந்த வருடம் இரண்டு போகங்களில் 4.8மில்லியன் மெற்றிக் டொன் நெல் உற்பத்தி செய்யப்பட்ள்ளது.இதில் 3.1 மெற்றிக் டொன் நாட்டு நெல்லே உற்பபத்தி செய்யப்பட்டுள்ளது.
இதனை அரிசியாக்கினால் 2.1 மில்லியன் மெற்றிக் டொன் நாட்டு அரிசி கிடைக்க வேண்டும்.ஆனால் எமது மாதாந்த நுகர்வு 1.4 இலட்சம் மெற்றிக் டொன் அதனால் நாட்டில் 4 லட்சம் மெற்றிக் டொன் அரிசி மேலதிகமாக இருக்க வேண்டும்.
மேலதிக நெல் எங்கே ? விவசாயிடம் நெல் இல்லை, 220 க்கு கட்டுப்பாடு விலையில் கொள்வனவு செய்ய நுகர்வோருக்கு சந்தையில் அரிசி இல்லை.இதற்கு தீர்வாகவே இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.