News

அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் கூட இல்லை என்பது சாதாரணமாக கடந்துசெல்லும் விடயமல்ல !

இனவாதி என கூறப்பட்ட மஹிந்தவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் (2005-2010 ) மகிந்தவின் கீழ் அமைச்சரவையில் முழு அமைச்சர்களாக இருந்த எமது பா.உ. கள்*

1.ALM.அதாஉல்லா

2.ரிசாட் பதியுதீன்

3.றஊப் ஹகீம் (தபால்)

4.பேரியல் அஸ்றப்

5.AHM.பெளசி

6M.H.முஹம்மட்

*Deputy -பிரதி அமைச்சர்கள்*

1.Basheer

2.Husain bahaila

3.MIM.Hizbullah

4.abdul Majeed

5.Cader (காதர் ஹாஜ்யார் கண்டி)

6.Faizer Mushthafa

(*மகிந்தவின் 2 வது ஆட்சிக்காலத்தில் (2010-2015) மகிந்தயோடு அமைச்சரவையில் இருந்தவரகள்*).

1.AHM.பெளசி

2.றஊப் ஹகீம் (நீதி)

3ALM.அதாஉல்லா

4.ரிசாட் பதியுதீன்

5.Abdul Cader கண்டி

6.Abdul haleem கண்டி

7.Basheer segudawuth

*பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள்*

1.பைசர் முஸ்தபா

2.ஹிஸ்புல்லா

3.அமீர் அலி

4.ஹசன் அலி

5.பசீர் சேகுதாவூத்

சரி இப்ப விசயத்துக்கு வருவோம், இதெல்லாம் பிழ ஆகவே சிஸ்டம் சேஞ்ச் (சிலருக்கு சிஸ்டமே விளங்கல்ல அப்ப எப்புடி சேஞ்ச் விளங்கும் என்பது வேற கத) .நாட்டில் சட்டத்தை இயற்றுவது பாராளுமன்றம்.ஆனால் ஆளுகின்ற *ஒழுங்குவிதிகளை* ( by- laws / regulations ) உருவாக்கும் மிக மிக முக்கியமான இடம் அமைச்சரவையாகும்.அமைச்சரவை முடிவுகள் கூட்டுப்பொறுப்புடையதாகவும்,சில போது இரகசியமானதாகவும் பேணப்படவேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும்.

இப்படியான மிக மிக முக்கியமான 21அமைச்சர்கள் நியமனங்களில் ஒண்றுகூட முஸ்லிம் இல்லை என்பது சாதாரணமாக கடந்துசெல்லும் விடயமல்ல.அனுரவிற்கும் அங்குள்ள அத்தனைபேருக்கும் இது தெரிந்தும் தைரியமாக முஸ்லிம் ஒருவரும் இல்லாமல் நியமணங்களை வழங்கியுள்ளார்கள்.

இதற்கு பிறகு அவர்கள் ஒருவரை நியமிக்கலாம் ஆனால் அதற்கே பலமட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றதென்பது நுட்பமான அழுத்தங்களின் ஆரம்பகட்டமாகவே தோன்றுகின்றது.அமைச்சரவையில் முஸ்லிம்களின் விடயங்கள்தொடர்பிலான விடயங்களை தெளிவுபடுத்த ஓரிருவராவது அவசியம் அல்லவா.

தமிழ் சமூகத்தில் இருவரை நியமித்து விட்டு (அவர்களுக்கு அப்படி என்னதகுதியோ தெரியாது,இவ்வாறு சொல்வதனால் சகோதர அந்த இனத்தை கொச்சைப்படுத்தும் அர்த்தமாகாது) இன்னொரு சமூகத்தை அவமானப்படுத்தக்கூடாது.அல்லது முஸ்லிம்கள் இங்கு ஒரு இனமல்ல அவர்கள் சாதாரண ஒரு குழுதான் என உலகிற்குச்சொல்லும் உள்குத்தா என்றும் புரியவில்லை.எமது முந்தைய அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கலாம்,

அவர்கள் அமைச்சரவையில் எம் சமூகம் சார்ந்த நிலைப்பாட்டை ஆகக்குறைந்தது தெளிவாவது படுத்தின பல சந்தர்ப்பங்கள் உண்டல்லவா (இதில் விமர்சனங்கள் இல்லாமலில்லை) அதேநேரம் தமது அமைச்சுக்கள் ஊடாக ஒதுக்கப்படும் நிதிகளைப்பயன்படுத்தி எமக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய சேவைகளையாவது செய்தார்களல்லவா(ஒரேயடியாக நண்றிமறத்தலும் பிழைதானே).

ஒருவருடைய பிரதிநிதித்துவம் என்பது அங்கீகாரம்,கெளரவம் அதனை இல்லாமல் செய்ததை நியாயப்படுத்த நினைக்கும் சில முகநூல் NPP போராளிகள் கொள்ளை அழகு. எந்தகட்சியாக இருந்தாலும் பிழையை பிழை என்று கூறும் மனநிலைப்பக்குவம் நம் அனைவரிடமும் இருக்கவேண்டும்.இவர்களது கொம்மியூனிச சாயல் சிலபோது மதவிடயங்களில் தலையிட்டாலும்,மம மாலிமாவ மாத்தயா எண்டுக்கு நிக்கமுடியாது என்பதும் வெளிப்படையானது.

இலங்கை அரசியலில் வடகிழக்கு தவிர்ந்த அரசியல்வேறு ,வடகிழக்கு அரசியல்வேறு.வடகிழக்கு 30 வருட யுத்தத்தையும்,31 ஆயிரம் பிரச்சினைகளுடனும், இரத்தம் தோய்ந்த வரலாற்றுடனும் நிற்கின்ற பூமியாகும்.

இங்கு மேட்டுக்குடி அரசியலின் இயல்பில் அல்லுண்டு *கண்மூடித்தனமாக* போவதும் சிக்கலாகிவிடலாம்.

*அழகிய வண்ணாத்துப்பூச்சியும் ஒரு புழு தான் சகோதரயா*

ML.M.Jahid- (B.A)

Varipathanchenai

Recent Articles

Back to top button