ஜனாதிபதியின் உரையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து பேசவில்லை ; சாணக்கியன்
ஜனாதிபதியின் உரையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து பேசவில்லை என சாணக்கியன் ராசமாணிக்கம் எம் பி குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ஜனாதிபதியின் உரையில் மிகப்பெறிய குறைபாடாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாகவும் பொறுப்புக்கூறல் அதாவது கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது தொடர்பாகவும் நேரடியாக ஜனாதிபதி எதுவும் சொல்லவில்லை.
மத நல்லிணக்கம் தொடர்பில் பேசிய ஜனாதிபதி தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாகவும் பொறுப்புக்கூறல் அதாவது கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது சம்பந்தமாகவோ அதிகாரப்பகிர்வு சம்பந்தமாகவோ சொலவில்லை.
ஆனால் அவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இரானுவ முகாம் ஒன்றை அகற்றியிருந்தார்.அது வரவேற்கத்தக்க விடயம். நாம் அனைத்தைதுயும் விமர்ச்சிக்க வேண்டிய தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.
அதிகாரப்பகிர்வு தொடர்பான கோரிக்கைகளையே தான் முன்வைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.