News
பத்தரமுல்லை நகரில் சென்று கொண்டிருந்த சொகுசு காரில் ஏற்பட்ட திடீர் தீயினால் கார் முற்றாக எரிந்தது.
பத்தரமுல்லை நகரத்தின் ஊடாக சென்று கொண்டிருந்த சொகுசு காரொன்றில் ஏற்பட்ட திடீர் தீயினால் கார் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக கோட்டே நகரசபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இன்று (22) காலை பத்தர முல்லையில் இருந்து கொஸ்வத்தை நோக்கி பயணித்த இந்த காரின் முன்பகுதியில் இருந்து சிறிது புகை வெளியேறி, பின்னர் தீப்பற்றி எரிந்தது.
பின்னர் வாகனத்தில் வந்தவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் அது பலனளிக்காததால் கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.