News
வீதிக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி மாயம் – கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
அங்கொடை, களனிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆறு நாட்களாக காணாமல் போயுள்ளதக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன சிறுமி கடந்த 17 ஆம் திகதி பிற்பகல் வீதிக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என காணாமல் போன சிறுமியின் தாய் முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் 077 776 6582 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது முல்லேரியா பொலிஸ் நிலையத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.