முஸ்லிம்களை இந்தியாவில் வாழ வைத்தது மிகப்பெரிய தவறு என மோடியின் பா.ஜ.க மத்திய அமைச்சர் தெரிவிப்பு
1947ல் அனைத்து முஸ்லிம்களும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டிருந்தால் நாட்டின் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும் என்று மோடியின் பா.ஜ.க அரசின் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், கூறி உள்ளார்.
“முஸ்லிம்களை இங்கு வாழ அனுமதித்தது மிகப்பெரிய தவறு. மத அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டிருந்தால், முஸ்லிம்கள் ஏன் இங்கு இருக்க அனுமதித்தார்கள்? அவர்கள் இங்கு வாழ அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்த நிலை உருவாகியிருக்காது” என்று பெகுசராய் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிங் ஊடகங்களிடம் கூறினார்.
இந்த அமைச்சர் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை வெளியிடுவது இது முதல் முறையல்ல. அவரது கருத்துகள் அடங்கிய வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கிரிராஜ் சிங் மூன்று முறை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் ஊரக வளர்ச்சிக்கான மத்திய அமைச்சராக பணியாற்றினார்.
“இது இந்த நாட்டின் துரதிர்ஷ்டம். 1947-ல் நமது முன்னோர்கள் சிலர் மத அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டபோது அனைத்து முஸ்லிம்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால், இதுபோன்ற கேள்விகளை யாரும் எழுப்பியிருக்க முடியாது” என்று சிங் கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில் சிங், பாட்னாவில் நடந்த ஒரு நிகழ்வில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ எதிர்ப்பு
நடவடிக்கையில் ஈடுபட்டதாக வெறுப்புக் கண்காணிப்புக் குழுவான ஹிந்துத்வா வாட்ச் தெரிவித்துள்ளது.