News

NPP தீவிர ஆதரவாளர்கள் பலர் அரசாங்கத்தின் தவறை பொதுவெளியில் சுட்டிக்காட்டுவது வரவேற்கவேண்டியதாகும்.

“தற்போதய NPP ஆதரவாளர்களில் பலர் NPP யின் உருவாக்கத்தில் பங்களித்திருந்தார்களா? அதன் கொள்கைக்காக அதனோடு அனைத்து பாடுபட்டார்களா?”

முஸ்லீம்களில் ஒருவருக்குக் கூட அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவுமுமில்லை இனியும் வழங்கப்படாது சில வேளை அவ்வாறானவர்கள் அனுபவங்களைப் பெற்று அனுபவசாலியாகும் வரை காத்திருந்து அமைச்சராகும் போது பார்த்துக்கொள்ளலாம். இவ்வாறுதான் அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் கருத்தை நோக்கமுடிகிறது.

முஸ்லீம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாத இந்த தவறான விடயத்தை, தேர்தல் காலங்களில் NPP யை தீவிரமாக ஆதரித்த பலர் பொதுவெளியில் அறிவுபூர்வமாகவும, தர்க்கரீதியாகவும் முன்வைப்பதானது வரவேற்க வேண்டிய விடயமாகும்.

நாட்டிலுள்ள அத்தனை சமூகத்தவரும் மத, சமய, கலாசார விழுமியங்களாலும் நம்பிக்கைகளாலும் கட்டமைக்கப்பட்டவர்களே அதனோடு உணர்வு பூர்வமாக பின்னிப்பிணைந்தவர்களுமாகும் என்பது கூட தவறான விடயமில்லை என்ற புரிதலுடன் ஒருநாட்டின் அரசாங்கங்கள் தனது நாட்டுக்குள் உள்ள சமூகங்களின் கலாசார மனோநிலையை புரிந்து கொண்டு செயற்படுவதானது ஜனநாயக விரோதமானதாக மாறிவிடாது.

ஏனைய மதநம்பிக்கைகள் போல முஸ்லீம்களின் சமய நம்பிக்கைகளும் வாழ்வியலுடன் தொடர்பான ஒன்றாகவே உணர்வுபூர்வமாக பார்க்கப்படுகின்றது. இதனால் ஏனையவர்கள் போல முஸ்லீம்களும் தங்களது நடத்தைகளை வெளிக்காட்டுகிறார்கள்.

உதாரணமாக,.ஐரோப்பிய நாடுகளில் முஹம்மது நபியை பற்றிய கேலிச்சித்திரம் வரையப்பட்டால் இலங்கையிலுள்ள முஸ்லீம்கள் தங்களது எதிர்ப்பை காட்டுவார்கள், இதேபோன்று பலஸ்தீனத்தில் முஸ்லீம்களுக்கு பிரச்சினை என்றால் இங்குள்ள முஸ்லீம்கள் தங்களது கண்டனங்களை தெரிவிப்பார்கள். இவ்வாறன விடயங்கள் சடத்துவ மதவாத மல்ல மாறாக இது ஒரு மத ரீதியான உணர்வு இதில் எந்த தவறும் கிடையாது. இதேபோன்றே ஏனைய சமூகத்தவரும் தங்களது வெளிப்பாடுகளை உணர்வுகளாக வெளிக்காட்டுகின்றனர்.

தற்போது எழுந்துள்ள முஸ்லீம் அமைச்சர் விடயமும் கலாசார மனோநிலையுடன் தொடர்பான முஸ்லீம்களின் உணர்வுபூர்வமான விடயமாகும்.

முஸ்லீம் அமைச்சர் ஒருவரை ஏன் முஸ்லீம்கள் கேட்கிறார்கள்?

இந்தநாட்டின் சட்ட ரீதியான பலவிடயங்களில் அமைச்சரவையின் தாக்கம் அதிகம் என்பதால் முஸ்லீம்களை பாதிக்கின்ற அல்லது முஸ்லீம்களின் சமய, கலாசார உணர்வை பாதிக்கின்ற விடயங்கள் அமைச்சரவைக்கு வருகின்ற போது அங்கு தெளிவுபடுத்தக் கூடியவர்கள் இருக்க வேண்டும். இதுமாத்திரமல்லாது சிறுபாண்மையினராக பலவிடயங்களில் அவதானமாகவும் இருக்க வேண்டும்.

ஏன் இந்த சந்தேகம் எமக்கு எழுகின்றது?

NPP யை பிரதிநிதித்துவப்படுத்தி தற்போது நியமிக்கப்பட்டுள்ள மகளிர் வவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் அவர்கள் கூட ஏற்கனவே MMD தொடர்பான நிலைப்பாட்டை முஸ்லீம்களின் கலாசார உணர்வை பாதிக்கும் வகையிலேயே கருத்துக்களை தெரிவித்திருந்தார் இதனால் அவ்வாறானவர்களுக்கு தெளிவு மிக மிக அவசியமாகும். இது ஒரு நடைமுறை உதாரணம் மாத்திரமே இது போன்று பல விடயங்கள் அமைச்சரவைக்கு வரும் போது அங்கு ஓர் முஸ்லீம் அமைச்சரின் தேவை அவசியப்படுகின்றது.

இதற்கான சந்தேகம் எங்கிருந்து நோக்கப்படுகிறது?

JVP யானது வேறு கட்சி சார்பான நல்லவர்களை,ஊழல் இல்லாதவர்களை, ஏனைய கட்சிகளில் தலைமைப் பொறுப்பை கொண்டிருப்பவர்கள் தனிநபர்களாக இணைபவர்களைக் கூட NPP யில் வேட்பாளர்களாக நிறுத்துவதில் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றியிருந்தார்கள் என்பது ஆரம்பத்தில் இருந்தே நாம் அறிந்திருந்து கொண்டுள்ளோம்.

அதேநேரம் NPP வேட்பாளர்களின் உரைகளை அவதானிக்கும் போது NPP நிறைவேற்றுக் குழுவை அல்லது அக்கட்சியின் உயர் பீடத்தை தாண்டி அவர்களால் முடிவுகளை எடுத்து செயற்பட முடியாது என்ற நிலை தெளிவாகவும் தெரிகிறது. அவர்கள் வாக்குகளை சேகரித்து கொடுக்கின்ற முகவர்கள் மாத்திரமே என்று தேர்தல் பிரச்சாரங்களில் தெரிவித்தும் இருந்தனர்.

இவற்றை எல்லாம் பார்க்கின்ற போது முஸ்லீம்களை அமைச்சரவையிலிருந்து திட்டமிட்டு புறந்தள்ளியுள்ளார்களா? என்ற சந்தேகம் எமக்கு எழாமலும் இல்லை.

NPP யை ஆதரித்து இம்முறை தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பலர் NPP யின் உருவாக்கத்தில் பங்குபற்றியவர்களோ அல்லது JVP யின் கொள்களை விளங்கிக் கொண்டோ, அதனோடு அனைத்து பாடுபட்டவர்களோ இல்லை என்பது தெளிவான விடயம். என்றாலும் இந்த நாட்டின் ஆட்சிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே NPP யை ஆதரித்திருந்தனர்.

இப்போது தங்களது உரிமை தொடர்பான விடயமாகவும், கலாசார உணர்வாகவும் பார்த்து முஸ்லீம் அமைச்சர்கள் யாரும் NPP அரசாங்கத்தில் உள்வாங்கப்படவில்லை என்ற விடயத்தில் அறிவுபூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் NPP ஆதரவாளர்கள் தவறை சுட்டிக்காட்டி முன்வைப்பதானது வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும்.

MLM.சுஹைல்

Recent Articles

Back to top button