News

UPDATE > அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகர் க்ளப் வசந்த உயிரிழப்பு – பாடகி உள்ளிட்ட 5 பேர் காயம்.

அத்துருகிரிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதோடு 5 பேர் காயமடைந்துள்ளனர்.

க்ளப் வசந்த என அழைக்கப்படும் வர்த்தகர் ஒருவரே பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் பிரபல சிங்கள பாடகி கே.சுஜீவாவும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வர்த்தக நிலையமொன்றின் திறப்பு விழாவில் அவர் கலந்துகொண்டபோதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button