இலங்கையில் ஈழ நாடு அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த கனடா பாராளுமன்றில் யோசனை முன்வைக்கப்பட்டது !
இலங்கையில் ஈழ நாடு அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் இனப்படுகொலை தொடர்பாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் சீன் சென், கனேடிய நாடாளுமன்றத்தில் மனுவில் கையெழுத்திட்டு வாக்கெடுப்பு நடத்த முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் தனி நாடு உரிமையை இலங்கை அரசாங்கம் கடுமையாக மீறியுள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இனப்படுகொலைப் போரின் மூலம் தமிழீழம் முற்றாகப் படுகொலை செய்யப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக உலகின் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.