புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் போலி பிரிகேடியர் உட்பட 11 பேர் கைது – வாகனங்களும் மீட்பு
தொல்பொருள் பெறுமதியான பகுதியை அகழ்வதற்கு அல்லது அகழ்வாராய்ச்சி செய்யவந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு இராணுவத்தினர் உட்பட பதினொரு பேர் கைது செய்யப்பட்டதோடு மூன்று கார்கள் மற்றும் ஒரு கெப் வண்டி வெலிகந்த நாமல்கம பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இராணுவத்தில் பிரிகேடியர் அணியும் சீருடை மற்றும் போலி அடையாள அட்டை, இராணுவ ஆடை பகுதிகள் ஒரு தொகை மற்றும் போலி அடையாள அட்டையை வைத்திருந்த சந்தேக நபர் பதுளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஏனைய இருவரும் இராணுவத்தின் திருகோணமலை ஹென்றிக் கோட்டையில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஏனைய எட்டு சந்தேக நபர்களும் யக்கல, பாதுக்க, கலேவெல, மில்லவன, மற்றும் தங்கல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொல்ஹேன்கொட இராணுவ முகாமின் ஒழுக்காற்று படை அதிகாரிகள் குழு வழங்கிய தகவலுக்கு அமைய வெலிகந்த பொலிஸார் மற்றும் முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, இராணுவத்தில் பிரிகேடியர் பதவி வகிப்பதாக கூறியவர் இராணுவத்தில் சேவையாற்றுபவர் அல்ல என தெரியவந்துள்ளது