News
NPP அரசாங்கத்தில் கருப்பு பணத்தையும் அரச வேலைத்திட்ட நிதியத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு !
தமது அரசாங்கத்தில் கருப்பு பணத்தையும் முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கபடும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டார்.
தமது அரசாங்கத்தில் “அரச வேலைத்திட்ட நிதி” என்ற ஒரு நிதியத்தை அமைப்பதாக கூறிய அவர் அந்த நிதியத்தில் பொதுமக்களும் முதலீடு செய்யலாம் என கூறினார்.
முதலீடு செய்பவர்களுக்கு பணம் எப்படி எங்கிருந்து வந்தது என தேடப்போவதில்லை அதற்கு நேரம் இல்லை என குறிப்பிட்ட அவர் ஆனால் அரசில்வாதிகளுக்கு எங்கிருந்து பணம் வந்தது என்பது தொடர்பில் விசாரணை செய்யப்படும் என குறிப்பிட்டார்.