News
சீரற்ற காலநிலை காரணமாக தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
சீரற்ற காலநிலை காரணமாக தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (26) மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
குறித்த தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 , 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்