News
காரைதீவு பிரதேசத்தில் ஐந்து சிறுவர்கள் உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம்..
காரைதீவு பிரதேசத்தில் ஐந்து சிறுவர்கள் (மத்ரசா மாணவர்கள்) உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம்
பதிவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐந்து சிறுவர்களுடன் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளரும் தற்போது மாயமாகி உள்ளனர்.
இரண்டு சிறுவார்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் நாம் குறிப்பிட்ட மத்ரசா மவ்லவியை தொடர்பு கொண்ட போது இதனை உறுதிப்படுத்தினார்
அப்பகுதியில் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் இப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, அபாயகரமான சூழ்நிலையில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு மக்களை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.