News

‘ஆளுநருக்கு சொல்லுங்கள்’ என்ற பொது மக்கள் தங்களது முறைப்பாடுகளை தெரிவிக்கும் புதிய திட்டத்தை மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப்  நடைமுறைப் படுத்துகிறார்

மேல் மாகாண சபை மற்றும் அதன் கீழ் இயங்கும் அரச நிறுவனங்களின் சேவை தொடர்பில் பொது மக்கள் தங்களது முறைப்பாடுகளை தெரிவிக்க ‘ஆளுநருக்கு சொல்லுங்கள்’ என்ற புதிய திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.



அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.



குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக மேல் மாகாண சபை மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களின் சேவை, விதிமீறல்கள் மற்றும் பொது மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ளவும் அது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.



இந்த நடைமுறை டிசம்பர் 2ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுவதுடன், அவசர நிலைமைகள் குறித்தும் அறிவிக்க முடியும்.



மேலும் 2025 ஜனவரிக்கு பிறகு வட்ஸ்அப் மற்றும் இணையம் மூலமாகவும் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன், இந்த திட்டத்திற்கு பொறுப்பாக மக்கள் தொடர்பு அதிகாரியாக அருண பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்.



24 மணி நேரமும், 365 நாட்களும் இந்த சேவை மக்களுக்காக இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



மக்கள் தங்கள் முறைப்பாடுகளை அறிவிக்க,

தொலைபேசி – 011-2092720 / 011-2092721


தொலைநகல் – 011-2092705


மின்னஞ்சல் – operationroomwpe@gmail.com



இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப்,



இந்த திட்டத்தின் மூலமாக மாகாணத்தின் அனைத்து அரச நிறுவனங்களும் குடிமக்களுடன் நெருக்கமாகவும், திறமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் பணியாற்ற முடியும், மேலும் எந்தத் துறையும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றால், அதற்குத் தேவையான நடவடிக்கையை ஆளுநரால் மேற்கொள்ள முடியும்” – என்றார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button