பணவீக்கம் குறைவடைந்தாலும் பொருட்களின் விலைகள் குறையவில்லை ! ?
புள்ளிவிபரங்களின்படி பணவீக்கம் குறைவடைந்த போதும் சந்தையில் பொருட்களின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு குறையவில்லை என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொழும்பில் உள்ள நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் தொடர்ந்து மூன்று மாதங்களாக குறைந்துள்ளது.
அதன்படி, 2024 அக்டோபரில் பதிவு செய்யப்பட்ட 0.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், 2024 நவம்பரில் மைனஸ் 2.1 சதவீதமாக இந்த எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் 1 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் நவம்பரில் 0.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மேலும், 2024 அக்டோபரில் 1.6 சதவீதமாக எதிர்மறையாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் நவம்பரில் எதிர்மறையாக 3.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
எவ்வாறாயினும், சுட்டெண்களுக்கும் உண்மையான பொருட்களின் விலைகளுக்கும் இடையில் அதிக வித்தியாசம் காணப்படுவதால் சந்தையில் பொருட்களின் விலைகளில் குறிப்பிடத்தக்க குறைப்பு ஏற்படவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.