News

அகில இலங்கை கிக்பொக்சிங் போட்டியில் வெலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலய‌  மாணவர் தங்கப் பதக்கம் வென்றார்

2024  நவம்பர் மாதம் 29 ஆம்‌ திகதி முதல் டிசம்பர் 1ஆம் திகதி வரை நாவலப்பிட்டிய ஜயதிலக்க விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இங்கை கிக்பொக்சிங் போட்டித் தொடரில் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் எம்.என்.‌ நபீர் அஹமட் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

வெலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் இந்த மாணவர் வெலம்பொடையைச் சேர்ந்த M.N.நலீம் S A. நசீரா தம்பதியினரின் புதல்வராவார்‌.

இந்த வருடம் தங்கப் பதக்கம் வென்ற இந்த மாணவர் கடந்த வருடமும் அதற்கு முன்னைய வருடமும் நடந்த போட்டிகளில் முறையே தங்கப் பதக்கம் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

கம்பளையைச் சேர்நத D.M. நவ்ஷாத் அவர்கள்‌ இந்த மாணவரின்‌ பயிற்றுப்பாளராகசெயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button