News

சபாநாயகர் அசோக ரன்வலவின் பட்டப்படிப்பு நிலை குறித்து ஆராய்ந்து, இது தொடர்பில் தவறான தகவல்களை முன்வைத்திருந்தால் அவரை பதவி விலக வற்புறுத்த வேண்டும்.அல்லது அவரை நீக்க வேண்டும்.

சபாநாயகர் அசோக ரன்வல மொரடுவ பல்கலைகழக பட்டதாரியா இல்லையா என்ற விடயம் பேசு பொருளாகியுள்ள நிலையில் பேராசிரியர் நிர்மால் தெவ்சிறி(Nirmal Devsiri) இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி தொடர்பில் அரசாங்கம் தீவிரம் காட்டினால், சபாநாயகர் அசோக ரன்வலவின் பட்டப்படிப்பு நிலை குறித்து ஆராய்ந்து, இது தொடர்பில் தவறான தகவல்களை முன்வைத்திருந்தால் அவரை பதவி விலக வற்புறுத்த வேண்டும்.அல்லது அவரை நீக்க வேண்டும்.

இங்கு ரன்வல தவறு செய்திருந்தால் இரண்டு தவறுகள் உள்ளன. இல்லாத பட்டம் உண்டு என்பதை மக்களுக்கு அறிவித்தது. இன்னொன்று, இப்படிப்பட்ட நேரத்தில் இதுபோன்ற விஷயங்களைப் பற்றிப் பகிரங்கமாகப் பொய் சொல்லி, அந்தப் பொய்களை மறைத்து இவ்வளவு முக்கியப் பதவியை வகிக்கலாமே என்று நினைத்தமை. முதல் குற்றத்தை விட இரண்டாவது குற்றம் மிகவும் தீவிரமானது.

தலைக்கவசம், கால் கவசம் , உடல் உறுப்புகளுக்கு கவசம் இல்லாமல் பலம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னால் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வது போன்ற ஒரு நிலமையில் தாம் உள்ளோம் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசு தெரிந்து கொள்ள வேண்டும்.

Recent Articles

Back to top button