News

ரியாத் நகரில் “ஒரே நீர்” எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற மாநாடு பற்றிய அறிக்கை

அறிமுகம்
நீர் வளங்களின் நிலைமை மற்றும் உலகளாவிய அக்கறையை முன்னிலைப்படுத்தும் நோக்குடன் ரியாத்தில் டிசம்பர் 3, 2024 அன்று ஒரே நீர் மாநாடு நடைபெற்றது. இந்த உயர்மட்ட மாநாடு பருவநிலை மாற்றம், பவளமண்டலம் பாதுகாப்பு, மற்றும் நீர் மேலாண்மையின் நிலைத்தன்மை ஆகியவை தொடர்பான கருத்துக்களை முன்வைக்கும் ஒரு முக்கிய தளமாக இருந்தது.

மாநாட்டின் முக்கிய நோக்கங்கள்
இம்மாநாட்டின் முக்கிய நோக்கங்களாக பின்வருவன இடம் பெற்றுள்ளன:

  • நீர் பிரச்சினைகளை உலக அளவில் முன்னிறுத்தல்.
  • பருவநிலை மாற்றத்திற்கு தகுந்த நிலைத்த நீர் மேலாண்மையை மேம்படுத்தல்.
  • சர்வதேச ஒத்துழைப்பை உறுதி செய்தல் மற்றும் நீர்வளம் தொடர்பில் தனியார் மற்றும் பொது துறைகளை இணைத்து செயல்படுதல்.

முக்கிய பங்கேற்பாளர்கள்:

சவுதி அரேபியாவின் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் சர்வதேச தலைவர்கள் பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்:


• பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் மற்றும் அவரின் குழுவினர்.
• மொராக்கோ பிரதமர் அஸீஸ் அஃப்னூச் மற்றும் குழுவினர்.
• மங்கோலியா பிரதமர் ஓயூன் எர்டென் லோவ்ஸனம் மற்றும் குழுவினர்.
போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

மாநாட்டில் கலந்தாலோசிக்கப்பட்ட முக்கிய விடயங்கள்

மாநாட்டில் நீருடன் தொடர்புபட்ட பல முக்கிய விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன, அவற்றில் முக்கியமானவை பின் வருமாறு:

  1. நீர் மேலாண்மையின் நீண்டகால நிலைத்த தீர்வுகள்
  • உலகளாவிய தண்ணீர் மற்றும் சுகாதார நிதி இடைவெளியை நிரப்புதல்.
  • மாறும் பருவநிலைக்கு தகுந்த நீர் சேமிப்பு முறைகளை உருவாக்கல்.
  1. தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு
  • நாடுகளுக்கு இடையேயான நீர்வள ஒப்பந்தங்களை வலுப்படுத்துதல்.
  • வணிக நிறுவனங்கள் மற்றும் மக்களுடன் நீர் மேலாண்மையில் சிறந்த ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.
  1. புதிய தொழில்நுட்பத்துடன் தொடர்பு பட்ட தீர்வுகள்
  • பவளமண்டலங்களை பாதுகாக்க நவீன கருவிகளை அறிமுகப்படுத்தல்.
  • சுகாதாரமான குடிநீரை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளல்.

எதிர்பார்ப்புகள்

  • 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அடுத்த ஐ.நா. நீர் மாநாட்டுக்கு முன்பாக செயல்திறன் வாய்ந்த தீர்வுகளை வடிவமைத்தல்.
  • உலக நீர் மன்றம் மற்றும் துஷான்பே மாநாடு போன்ற ஏற்கனவே உள்ள நீர்வள மேற்பாட்டுடன் தொடர்பு பட்ட முயற்சிகளுடன் ஒருங்கிணைந்த முயற்சிகளை செயல்படுத்தல்.

முடிவுரை
*ஒரே நீர் எனும் தொனிப்பொருளில், ரியாத் நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாடு நீர்வளத்தின் எதிர்காலத்தை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்ட மிக முக்கியமான தருணமாக இருந்தது. நீர் மேலாண்மையின் அவசரத்தையும் முக்கியத்துவத்தையும் முன்வைத்த இந்த மாநாடு உலக நாடுகளுக்கு ஒத்துழைக்கவும், மக்கள் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான தீர்வுகளை உருவாக்கவும் வழிவகுக்கும் எனவும் நம்பப்படுகின்றது.

கலாநிதி M H M அஸ்ஹர்

Recent Articles

Back to top button