News

சிரியா: ‘எதிர்காலம் நம்முடையது’ – டமாஸ்கஸில் கிளர்ச்சிக்குழு தலைவர் அறிவிப்பு ..

“இனி எதிர்காலம் நம்முடையதுதான்” என்று கூறியுள்ள `ஹயத் தஹ்ரிர் அல் ஷாம்’ தலைவர் பின்வாங்குவதற்கு “இடமில்லை” என்று கூறியுள்ளார்.

`ஹயத் தஹ்ரிர் அல் ஷாம்’ அமைப்பின் தலைவர் அபு முகமது அல்-ஜவ்லானி சிரியாவின் அரசுத் தொலைக்காட்சியில் இதைக் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

‘மோசமான ஆட்சியாளர்’ அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் எனக் கூறியுள்ள கிளர்ச்சிப் படைகள், நாடு ‘விடுவிக்கப்பட்டது’ எனவும் அறிவித்துள்ளன.

சிரியாவில் அசாத் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாகவும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் கிளர்ச்சிக் குழுவின் தலைவர்கள் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல் மற்றும் வானொலியில் அறிவித்தனர்.

அசாத்தின் சர்வாதிகாரத்தால் கடந்த 50 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து சிறைகளில் அடைக்கப்பட்ட மக்கள் தற்போது தாயகம் திரும்ப முடியும், புதிய சிரியாவில் அனைவரும் நிம்மதியாக வாழ்வார்கள் என கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.

”ஒரு இருண்ட சகாப்தத்தின் முடிவு மற்றும் புதிய சகாப்தத்தின் ஆரம்பம்” என்று டெலிகிராம் செயலியில் ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் கிளர்ச்சி குழு குறிப்பிட்டுள்ளது.

ஹயத் தஹ்ரிர் அல் ஷாம், அதன் தாக்குதலை ஒன்றரை வாரத்திற்கு முன்பு தொடங்கியதில் இருந்து, அவர்கள் சிரியாவின் முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Recent Articles

Back to top button