பெரும் பொருட்செலவில் கடற்படை மூலம் முற்றுகை செய்து ஈரானுக்கு பாதிப்பு ஏற்படுத்த டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள நடவடிக்கை காமடியாக மாறியுள்ள சம்பவம்

✍️ முகிந்தன் துரைராஜசிங்கம்
ஈரான் மீது குண்டு வீசுவதை விட, தனது கடற்படை முற்றுகை அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் கூறி வருகிறார்.
ஆனால் யதார்த்தம் முற்றிலும் வேறானது. இந்த முற்றுகை கொஞ்சம் கூட பயனற்றது என்பதை ஈரான் நிரூபித்துக் காட்டியுள்ளது.
சர்வதேச கடல்சார் சட்டத்தின்படி, ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கடற்கரையிலிருந்து 12 கடல் மைல்கள் (12 nautical miles) வரை பிராந்திய நீர் எல்லை (Territorial Waters) உண்டு. இந்த எல்லைக்குள் மற்ற நாட்டுப் படைகள் அத்துமீறி நுழைவது போருக்குச் சமமான செயலாகும்.
ஈரான் இந்தச் சட்ட ஓட்டையை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது:
சுமார் 34 ஈரானிய எண்ணெய் கப்பல்கள் (Tankers) அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பித்துள்ளன.
இந்தக் கப்பல்கள் ஈரான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் கடற்கரையை ஒட்டியே (Hugging the coastline) பயணம் செய்கின்றன.
அமெரிக்கக் கடற்படை சர்வதேசப் பகுதியில் நின்றுகொண்டிருக்க, ஈரானியக் கப்பல்கள் இந்த 12 மைல் பாதுகாப்பு வளையத்திற்குள் நிழலைப் போல நகர்ந்து தங்கள் இலக்கை அடைகின்றன.
அமெரிக்காவின் அதிநவீன போர்க்கப்பல்கள் நடுக்கடலில் காத்திருக்க, ஈரான் தனது வர்த்தகத்தைத் தடையின்றித் தொடர்கிறது. 12 மைல் எல்லைக்குள் நுழைய அமெரிக்கா தயங்குவதால், இந்த முற்றுகை வெறும் “ காமடியாக” மாறியுள்ளது.
“ஒரு நாட்டின் இறையாண்மையை மதிக்கும் சர்வதேசச் சட்டமே, இன்று ஈரானின் பொருளாதாரத்தைக் காக்கும் கேடயமாக மாறியிருக்கிறது.”
கடல் வழி மட்டுமல்லாது, ஈரான் தனது வர்த்தகத்தைத் தொடர இன்னும் பல நிலவழி மற்றும் தொழில்நுட்ப மாற்றுகளைக் கையில் வைத்துள்ளது. அவற்றைப் பற்றி அடுத்த பதிவுகளில் விரிவாகப் பார்ப்போம்.
முட்டாள் ட்ரம்பின் ‘Naval Blockade’ திட்டத்தை ஈரான் முறியடித்துவிட்டது.
மீண்டும் ஒருமுறை ட்ரம்பை ஈரான் முட்டாள் ஆக்கியுள்ளது.



