News
பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சட்டபூர்வமாக மக்கள் பணத்தை சூரையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிக்கான தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே. சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அதிகரித்து கொடுத்து பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சட்டபூர்வமாக மக்கள் பணத்தை சூரையாட வாய்ப்பு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களை மடியில் வைத்து தலாட்டாமால் அரிசியினை பதுக்கி வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே. சேமசிங்க தெரிவித்துள்ளார்.

