News

VIDEO : அரிசி ஆலைகள் மற்றும் அவற்றின் களஞ்சியசாலைகளில் இடம்பெற்ற சோதனையில், மறைத்து வைக்கப்பட்டு இருந்த 20 இலட்சம் கிலோவுக்கும் அதிக நெல் மற்றும் அரிசி  மீட்பு

ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இது தொடர்பில் அடுத்த 10 நாட்களுக்குள் அவதானமாகச் செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

நெல் கொள்வனவிற்காக வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுவதாகவும் அதனால் மக்களின் அரிசியை நுகரும் உரிமையில் கைவைக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதன்படி அரிசி விலைகள் பின்வருமாறு,

நாடு அரிசி 1 கிலோ மொத்த விலை 225 ரூபா – சில்லறை விலை 230 ரூபா
வெள்ளை அரிசி மொத்த விலை 215 ரூபா – சில்லறை விலை 220 ரூபா
இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி 1 கிலோ 220 ரூபா
சம்பா அரிசி மொத்த விலை 235 ரூபா – சில்லறை விலை 240 ரூபா
கீறி சம்பா அரிசி மொத்த விலை 255 ரூபா – சில்லறை விலை 260 ரூபா

அதேபோல் நாளாந்தம் அரிசி ஆலைகளிலிருந்து வெளிவரும் அரிசியின் அளவினைக் கணக்கிடுமாறும் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்தார்.

அதே போன்று அரிசி தொடர்பான பிரச்சினைகளை அரசாங்கத்துடன் சுமூகமாக தீர்த்துக் கொள்ளுமாறும் அரிசி வர்த்தகர்களிடம் ஜனாதிபதி கோரினார்.

இன்று முதல் நெல் ஆலை உரிமையாளர்களினால் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் அரிசி பொதி, தொகை மற்றும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அளவு தொடர்பிலான அறிக்கையைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இதன்படி நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால் பெற்றுக் கொள்ளப்படும் அறிக்கை வர்த்தக அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளது.

அதேவேளை பொலனருவை மற்றும் அம்பாந்தோட்டையில் உள்ள அரிசி ஆலைகளில், மற்றும் அவற்றின் களஞ்சிய சாலைகளில்  சோதனைகள் இடம்பெற்றன,  ஹம்பந்தொட்ட திஸ்சமஹராம பிரதேச அரிசி ஆலைகளில் நேற்று இடம்பெற்ற சோதனைகளில்  20 இலட்சம் கிலோ நெல் மற்றும் 2 இலட்சம் கிலோ அரிசி அங்குள்ள களஞ்சிய சாலைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு உடனடியாக சந்தைக்கு விநியோகிக்குமாறு  அறிவுறுத்தல்கள் விடப்பட்டன .. இது தொடர்பான வீடியோ 👇🏼

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button