News
ஜனாதிபதி அரிசி ஒரு கிலோவுக்கான விலையை சூட்சமமாக 20 ரூபா அதிகரித்து கொடுத்துள்ளார்..

ஜனாதிபதி பதவியேற்று 3 மாதங்களுக்குள் அரிசி ஒரு கிலோவுக்கான விலையை சூட்சமமாக 20 ரூபா அதிகரித்து கொடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா குறிப்பிட்டார்.
கடந்த 3 மாதங்களில் நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கவில்லை , மின்சார கட்டணம் அதிகரிக்கவில்லை, ஊழியர்களை சம்பளம் அதிகரிக்கவில்லை உற்பத்தி செலவுவும் அதிகரிக்கவில்லை, களஞ்சியசாலையில் இருக்கும் நெல்லுக்கு ஜனாதிபதி ஒரு கிலோவுக்கான விலையை சூட்சமமாக 20 ரூபா அதிகரித்து கொடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா குறிப்பிட்டார்.
இதனால் விவசாயிகளுக்கோ நாட்டு மக்களுக்கோ நண்மையில்லை என கூறிய அவர் ஜனாதிபதி பாரிய அரிசி ஆலைகளின் முதலாளிமார்களை சந்தோஷப்படுத்தியுள்ளதாக கூறினார்.

